அண்மைய செய்திகள்

recent
-

இன்றுடன் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தமது தகவல்களை வழங்கும் கால அவகாசம் நிறைவு.....

இம்முறை பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள் தமது தகவல்களை வழங்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், இதுவரை தகவல்களை வழங்காத பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினத்துக்குள் (15) விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்தி தகவல்களை வழங்குமாறும் செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள 175உறுப்பினர்கள் இதுவரை அவர்களின் தகவல்களை ஒன்லைன் முறைமையூடாக (Online Registration System) பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தினால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்லைன் விண்ணப்பப் படிவம் மூலம்உறுப்பினர்களின் தகவல்களை பெறுவது வெற்றிகரமாக அமைந்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வில் இந்த தகவல்கள் அவசியம் எனவும், இதுவரை தகவல்களை வழங்காத பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய
தினத்துக்குள் (15) விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்தி பாராளுமன்றத்துக்கு தகவல்களை வழங்குமாறும் செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 11 ஆம் திகதி அலரி மாளிகையில் தனது பணிகளை பொறுப்பேற்ற பின்னர் பாராளுமன்றத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி
செய்து தமது தகவல்களை வழங்கியதை அடுத்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 

இன்றுடன் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தமது தகவல்களை வழங்கும் கால அவகாசம் நிறைவு..... Reviewed by Author on August 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.