அண்மைய செய்திகள்

recent
-

அரசியல் உரிமை சார்ந்த விடையங்களில் வருகின்ற அரசாங்கத்திற்கு எங்களினால் முடிந்த அழுத்தங்களை வழங்கி இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்போம்

 

அரசியல் உரிமை சார்ந்த விடையங்களில் வருகின்ற அரசாங்கத்திற்கு எங்களினால் முடிந்த அனைத்து அழுத்தங்களையும் வழங்கி இனப்பிரச்சினைக்கான தீர்வினை நாங்கள் நகர்த்தி ஒரு முடிவை எடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய பொறுப்பு மக்களினால் எங்களுக்கு தரப்பட்டுள்ளது.அதனை செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை(10) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எனக்கு வாக்களித்த வன்னி மாவட்ட மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

எதிர் வரும் காலங்களில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்போடும், தமிழ் தேசியத்தோடும் பயணித்து எங்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு எங்களுடைய இனப்பிரச்சினையை தீர்த்து அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தொடர்ந்தும் மக்களினுடைய தரவு தேவைப்படுகின்றது.

அதே போல் மக்களினுடைய அன்றாட பிரச்சினைகள்,அத்தியாவசிய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டிய ஒரு கடமைப்பாடும் எங்களிடம் சுமத்தப்பட்டுள்ளது.

-நிச்சையமாக அந்த கடமையினை நாங்கள் சரியான முறையில் செய்து முடிப்போம்.தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு இந்த தேர்தலிலே ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை நாங்கள் உணர்கின்றோம்.

-எதிர் காலத்தில் இந்த வீழ்ச்சிக்கு காரணமான விடையங்களை ஆராய்ந்து தமிழ் மக்களிடம் இருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பை அன்னியப்படுத்த முனைகின்ற சக்திகளை இனம் கண்டு அதற்கான தீர்வினை நாங்கள் பரிகாரமாக ஏற்று செயல் படுத்த வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது.

-தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்குள் பல குறைபாடுகள் இருக்கின்றன.அவை தீர்த்து வைக்கப்பட வேண்டியவை.
-குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்வது தொடக்கம், தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு என கடந்த காலங்களில் ஒருங்கிணைப்புக் குழு என்று ஒரு குழு செயல்பட்டு வந்தது.

-அது விரிவு படுத்தப்பட்டு ஒழுங்கான நிர்வாக கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு செயல் வடிவம் கொடுக்கப்பட்டு எதிர் காலத்தில் நடை முறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எதிர் கால வளர்ச்சியை கொண்டு வர முடியும்.

-அந்த முயற்சிக்கான சகல அழுத்தங்களையும் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்று என்ற ரீதியிலும்,குறித்த கட்சியின் பிரதி நிதி என்ற ரீதியிலும் நிச்சையமாக நானும் அதற்குறிய பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி ஏனைய கட்சிகளுடன் இணைந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பை வலுவாக்கி பலப்படுத்த வேண்டிய ஒரு தேவை உள்ளது.

-அதனை நிச்சையமாக நாங்கள் எதிர் காலத்தில் செய்து முடிப்போம்.

-அதே போல் அரசியல் உரிமை சார்ந்த விடையங்களில் வருகின்ற அரசாங்கத்திற்கு எங்களினால் முடிந்த அனைத்து அழுத்தங்களையும் வழங்கி இனப்பிரச்சினைக்கான தீர்வினை நாங்கள் நகர்த்தி ஒரு முடிவை எடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய பொறுப்பு மக்களினால் எங்களுக்கு தரப்பட்டுள்ளது.

-அதனை செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.அதே போல் மக்களினுடைய அன்றாட வாழ்வாதார விடையங்களிலும், அபிவிருத்தி விடையங்களிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டி இருக்கின்றது.

-இந்த தேர்தல் முடிவுகள் கூட அபிவிருத்தி விடையங்களில் மக்களினுடைய ஒவ்வொரு கிராமங்களிலும் நாங்கள் சீர் தூக்கிப் பார்த்து அந்த கிராம மக்களினுடைய தேவைகள் என்ன என்று ஆராய்ந்து அவர்களுடைய வாழ்வாதாரம், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

நிச்சையமாக எங்களுக்கு தெரியும் இது ஒரு கஸ்டமான விடையமாக காணப்படும்.
மூன்றில் இரண்டு பெறும்பான்மை பலத்துடன் இருக்கின்ற அரசாங்கத்திடம் எதிர்க் கட்சியில் இருந்து கொண்டும் அதே போல் தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்கின்ற போது அவர்கள் மாற்றான் கை மனப்பாங்குடன் எமது கட்சியை பார்க்கின்ற ஒரு நிலமை நிச்சையமாக ஏற்படும்.

அவற்றை எல்லாம் நாம் தாண்டி  எமது மக்களினுடைய அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கின்ற முயற்சியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை உறுவாக்குகின்ற முயற்சியில் எங்களுடைய சகல முயற்சிகளும் எதிர் வரும் ஐந்து ஆண்டுகளில் பாராளுமன்ற ஆயுட் காலத்திற்குள் நிச்சையமாக செய்து முடிப்போம்.

-அNது போல் கடந்த காலங்களில் தீர்த்து வைக்கப்படாத,தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு விடையங்கள் உள்ளது. குறிப்பாக அரசியல் கைதிகளின் பிரச்சினை,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, காணி சுவீகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் இன்னும் தீர்த்து வைக்கப்படாமல் அரசாங்கம் இவற்றிற்கு எவ்வித பொறுப்புக் கூறலும் செய்யாமல் காலம் கடத்திற்கொண்டு இருக்கும் நிலமை உள்ளது.

இவை எல்லாம் உடனடியாக தீர்த்து வைக்கப்பட வேண்டிய பிரச்சினை.இவற்றிற்கு காலம் தாழ்த்தி,கால நீடிப்பு வழங்கி,தீர்த்து வைக்காமல் இருக்கின்ற நிலமையை ஏற்படுத்தாமல் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு அரசிற்கு உரிய அழுத்தங்களை வழங்கி இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சகல நடவடிககைகளையும் முன்னெடுப்போம்.என அவர் மேலும் தெரிவித்தார்...
 
 
அரசியல் உரிமை சார்ந்த விடையங்களில் வருகின்ற அரசாங்கத்திற்கு எங்களினால் முடிந்த அழுத்தங்களை வழங்கி இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்போம் Reviewed by Author on August 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.