அண்மைய செய்திகள்

recent
-

1000 ரூபாய் நாளாந்த கொடுப்பனவு குறித்து பிரதமர் கருத்து

தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபாய் 1000 நாளாந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பது குறித்த நாமே பேச்சுவார்த்தை நடத்தினோம் என்னும் வியத்திற்கு பொறுப்பான அமைச்சர் அதற்கான அறிவுறுத்தலை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின் செய்தி பணிப்பாளர்களுடன் அலரி மாளிகையில் இன்று (29) இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

 ஊடகவியலாளர் போதைப்பொருள் வர்த்தகம் சமூகத்தில் பாரிய பிரச்சினையாகவுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வொன்று எடுக்கப்படுமா?

 பிரதமர்: நாம் இந்த ஆபத்து குறித்து அறிந்து சோதனைகளை ஆரம்பித்துள்ளோம். தற்போது இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் சிறிய மட்டத்திலானோரே சிக்குகின்றனர். இதில் பிரதானமானவர்களையே கைது செய்ய வேண்டும். நாம் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம். அவர்களை கைது செய்வதன் மூலம் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்க முடியும்.

 ஊடகவியலாளர்: தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபாய் 1000 நாளாந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதை செயற்படுத்துவீர்களா?

 பிரதமர்: நாமே அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினோம். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அதற்கான அறிவுறுத்தலை மேற்கொண்டுள்ளார்.

 ஊடகவியலாளர்: ஜனாதிபதி கிராமந்தோறும் பயணிப்பது அமைச்சர்களினால் பணிகள் இடம்பெறாத காரணத்தினாலா? 

 பிரதமர்: அப்படி ஒன்றும் இல்லை. ஜனாதிபதி கிராமங்களுக்கு பயணிப்பது என்பது இன்று நேற்று இடம்பெற்ற விடயமல்ல.

 அமைச்சர் விமல் வீரவன்ச: ஜனாதிபதி கிராமந்தோறும் பயணிப்பது தவறான விடயமா?

 ஊடகவியலாளர்: மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் திட்டம் செயற்படுத்தப்படுகின்றதா?

 பிரதமர்: அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச சட்டத்திற்கு அமையவே சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. 

 பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த: கடந்த அரசாங்கம் போன்று நாங்கள் நீதிமன்ற செயற்பாடுகளில் தனிப்பட்ட தலையீடுகளை மேற்கொள்ள மாட்டோம்.

 அமைச்சர் விமல் வீரவன்ச: முந்தைய அரசாங்கம் ஊழல் தடுப்பு குழுவொன்றை நியமித்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளுக்கும் கொடுப்பனவுகளை வழங்கி. அதற்காக ரூபாய் 3 கோடி செலவிடப்பட்டது. அதன்படி ஊழல் தடுப்பு குழுவினாலேயே ஊழல் செய்யப்பட்டுள்ளது. அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் அவரை நியமித்தவர்களே பொறுப்பு கூற வேண்டும்.

 ஊடகவியலாளர்: பிரதமரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட இன்று அமைச்சு பதவிகளிலுள்ள பலர் வீணாக சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றது. அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பீர்களா?

 பிரதமர்: தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் எதுவும் சிந்திக்கவில்லை. நாம் ஒன்றுக்கு ஒன்று செய்யும் விருப்பம் கொண்டவர்கள் அல்லர். நாம் ஒருபோதும் பழிவாங்கியதில்லை. மற்றுமொரு விடயம், எதிர்காலத்தில் அனைத்து தேர்தல் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 100 வீடுகளை கொண்ட மாடி குடியிருப்பு வீட்டு திட்டமொன்றை நாட்டுக்கு அறிமுகப்படுத்தவுள்ளோம்.  

 குறித்த சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தொழிற்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1000 ரூபாய் நாளாந்த கொடுப்பனவு குறித்து பிரதமர் கருத்து Reviewed by Author on September 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.