அண்மைய செய்திகள்

recent
-

தேர்தலில் தோற்றுவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன் – ட்ரம்ப்

அமெரிக்காவில் எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதில் தோல்வியடைந்தால் நாட்டை விட்டு வெளியேறுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 வரலாற்றிலேயே மிகவும் மோசமான வேட்பாளருடன் போட்டியிடுவதகவும் ஒருவேளை அவரிடம் தோற்றுவிட்டால், தனது வாழ்க்கை வீண் என கருதி, நாட்டை விட்டு வெளியேறுவதே நல்லது என்ற முடிவுக்கு வருவேன் என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில் ஜோர்ஜியாவில் இடம்பெற்ற பிரசாரம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், “ஜனநாயக கட்சியினர் அமெரிக்காவை கம்யூனிஸ்ட் நாடாக மாற்ற விரும்புகிறார்கள். அவர்களிடம் ஒன்றுமே இல்லை. உங்களது மதிப்புகள் மீது வெறுப்புகள் இருக்கிறது. மிகவும் மோசமான வேட்பாளருடன் போட்டியிடுகிறேன். அப்படி நடந்தால் நான் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன். தேர்தலில் தோற்றால் நான் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம். அவ்வாறு வெளியேறுவதே நல்லது. அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றில் ஜனாதிபதி தோரணையில் சிறப்பாக நடந்து கொண்டதே நானாகத்தான் இருப்பேன் என்பதில் எதுவித ஐயமுமில்லை” என கூறினார்.

தேர்தலில் தோற்றுவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன் – ட்ரம்ப் Reviewed by Author on October 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.