அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் தமிழ் வீரர்கள் கௌரவிப்பு!

லங்கா பிரீமியர் லீக் தொடரில் வடமாகாணம் சார்பில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணிக்காக இணைக்கப்பட்டிருந்த வீரர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று (19) இடம்பெற்றது. யூரா நிறுவன அனுசரணையுடன் யாழ் துடுப்பாட்ட சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்ச்சி அரியாலையிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. 

 கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட ஆக்களுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. வாகனத் தொடரணி மூலம் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்ட வீரர்கள் மேள வாத்தியம் முழங்க நிகழ்வு இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதன்போது வியாஸ்காந்த், கபில்ராஜ், டினோசன், விஜேராஜ் ஆகிய வீரர்களும் இவர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட ரதீபன் என்பவரும கெளரவிக்கப்பட்டனர். இந்த நான்கு வீரர்களில் வியாஸ்காந்திற்கு மட்டுமே மூன்று போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது, ஏனையோருக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை.


யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் தமிழ் வீரர்கள் கௌரவிப்பு! Reviewed by Author on December 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.