அண்மைய செய்திகள்

recent
-

யாழ் குடாநாட்டில் தனிச் சீன மொழியிலான கட்டிடம்

யாழ். வடமராட்சி பகுதியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன் கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ். வடமராட்சி வத்திரியானில் தனி நபர் ஒருவரது சொந்தக் காணியில் சிறார்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த மைதானத்தின் முன் பகுதியில் சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு சீனர்களின் தேசிய கொடியில் உள்ள ராகன் சின்னமும் பதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருகையில், இந்த சிறுவர் பூங்காவினை அமைப்பதற்கு வெளிநாட்டு நபர் இங்குள்ள ஒப்பந்த நிறுவனத்திடம் ஒரு திட்ட படத்தைக் (plan image ) கொடுத்து இதே அமைப்பு போல அமைக்குமாறு கூறியுள்ளார். 

 இதனையடுத்து கட்டுமானத்தில் ஈடுபட்டவர்கள் அந்தத் திட்டப் படத்தில் உள்ளது போல சீன எழுத்தில் எழுதியுள்ளனர். அவர் சீனமொழியை பயன்படுத்துமாறு கூறவில்லை எனவும் அறியமுடிகிறது. இந்த விடயம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சீன எழுத்தினை அகற்ற பிரதேச செயலர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. இருப்பினும், வடமராட்சி கிழக்கு வத்திரியானில் அமைக்கப்படும் சிறுவர் பூங்காவில் சீன மொழி பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






யாழ் குடாநாட்டில் தனிச் சீன மொழியிலான கட்டிடம் Reviewed by Author on April 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.