அண்மைய செய்திகள்

recent
-

கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட மூவர் குருதி உறைவு காரணமாக உயிரிழப்பு

எஸ்ராசேனேக்கா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட மூவர் குருதி உறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ´எஸ்ராசேனேக்கா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட பலர் சில மணித்தியாலங்களிலேயே குருதி உறைவுக்கு உள்ளான பல சம்பவங்கள் உலகில் பதிவாகியுள்ளன. இலங்கையில் அறுவருக்கு அவ்வாறான நிலை ஏற்பட்டது. அதில் மூவர் உயிரிழந்துள்ளனர். 

இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசி மற்றும் பக்கவிளைவுகள் தொடர்பான குழு தெரிவிக்கையில் குருதி உறைவுக்கும், தடுப்பூசிக்கும் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அதாவது மில்லியன் மக்கள் தொகையில் 4-6 பேர் இவ்வாறு பாதிக்கப்படுகின்றனர். நோய் தொற்றால் அவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்பது அவர்களின் கருத்து. எனினும் இவ்வாறு குருதி உறைவு ஏற்படுவது குறைவு. எஸ்ராசேனேக்கா தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்றுக்கொண்டுள்ளது.´ என்றார். இதேவேளை, நேற்று (20) நாட்டில் 367 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதில் அதிகளவிலானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவானதுடன் அந்த எண்ணிக்கை 94 ஆகும். நேற்று இரண்டாவதாக கம்பஹாவில் 54 பேர் பதிவாகினர். 

 குருணாகலையில் நேற்று 43 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் வெளிநாடுகளில் இருந்து வந்த 22 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதற்கமைய இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 97,471 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றும் 5 கொவிட் மரணங்கள் பதிவான நிலையியல் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 625 ஆக உயயயயர்வடைந்துள்ளது.

கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட மூவர் குருதி உறைவு காரணமாக உயிரிழப்பு Reviewed by Author on April 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.