அண்மைய செய்திகள்

recent
-

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டல் ஒழுங்கு விதிகள்

COVID-19 ஒழிப்பு தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று வழிகாட்டல் ஒழுங்கு விதிகள் வௌியிடப்பட்டுள்ளன. 

 இதற்கமைய, 

 2021 மே மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 20 ஆம் திகதிக்கு பின்னர் COVID-19 நிலைமையை கருத்திற்கொண்டு அறிவித்தல் விடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

திரையரங்குகள், கலையரங்குகள், சிறுவர் பூங்காக்கள், நீச்சல் தடாகங்கள், களியாட்ட விடுதிகள், மதுபான சாலைகள், Casino, இரவுநேர களியாட்ட விடுதிகள், மசாஜ் நிலையங்கள் ஆகியன மறு அறிவித்தல் வரை மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடுகள், கூட்டங்கள், செயலமர்வுகள் என்பனவற்றை நடத்த எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு அங்காடிகள், பாரிய வர்த்தக அங்காடிகள், நிதி நிறுவனங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், சில்லறை வர்த்தக நிலையங்கள் என்பனவற்றில் 25 வீத பணியாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மத வழிபாட்டுத்தலங்களில் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், தங்குமிடங்கள் மற்றும் வாடி வீடுகள் என்பனவற்றில் 50 வீதமானோர் மாத்திரமே அனுமதிக்கப்படல் வேண்டும். அத்துடன், இவை இரவு 10 மணிக்கு பின்னர் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதியில்லை. 

நீதிமன்றங்களுக்கு 25 வீத மக்கள் பிரசன்னத்திற்கு மாத்திரமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டல் ஒழுங்கு விதிகள் Reviewed by Author on May 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.