அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடித்திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்.

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடித்திருவிழா தொடர்பான இறுதிக்கூட்டம் இன்று திங்கட்கிழமை (28) காலை 11 மணிக்கு மடுத்திருத்தலத்தின் புனித ஜோசப் வாஸ் தியான மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்காலாநிதி இம்மனுவல் பெர்னாண்டோ ஆண்டகை , மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டி மெல் , மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, மடுத்திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், உற்பட சம்பந்தப்பட்ட தினைக்களத் தலைவர்கள் , இராணுவ ,பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

 மடுத்திருத்தலத்தில் வழமையாக இடம் பெரும் மடு அன்னையின் ஆடி மாத உற்சவம் ஆணி மாதம் 23ஆம் திகதி (23-06-2021) கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு ஆடி மாதம் 2ஆம் திகதி (02-07-2021) திருவிழா திருப்பலி மருதமடு அன்னையின் திருச் சொரூப பவனியுடன் நிறைவு பெறும். 

 குறித்த திருவிழாவில் சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசி பெற்றுச் செல்கின்றமை வழமை. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் அசாதாரண சூழ் நிலை காரணமாக நாட்டின் சுகாதார நடை முறை இறுக்கமாக பின் பற்றப்படும் நிலையில் குறித்த மருத மடு அன்னையின் ஆடி உற்சவம் தொடர்பாக இரண்டு கூட்டங்கள் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற நிலையில் இறுதித் திர்மானத்தை முன்னெடுக்கும் கூட்டத்தில் குறித்த திருவிழாவிற்காக ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்ந்தும் கடைப் பிடிக்கப்படுவதும் ஆலோசனைகளின் அடிப்படையில் இறுதித் தீர்மானமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

 வெளி மாவட்ட யாத்திரிகர்கள் மடுத்திருவிழாவிற்கு வருவது தவிர்கப்படுள்ளதுடன் மடுத்திருத்தலத்தின் இரண்டு பிரதான பாதை ஊடாக மாட்டும் அனுமதிக்கப்பட்டவர்கள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளதோடு, தேவையின் நிமித்தம் மற்றும் உள் வருகின்றவர்களுக்கு அன்றிஜன்; பிரிசோதனை முன்னெடுக்கப்படுவதுடன் சுகாதார நடை முறை இறுக்கமாகப் பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருவிழா திருப்பலி எதிர் வரும் 2 ஆம் திகதி ஆயர் தலைமையில் காலை 6.15 மணிக்கும் ஒப்புக் கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து 6 திருப்பலிகள் குறிக்கப்பட்ட நேரத்தில் இடம் பெறுவதுடன் ஒரு திருப்பலியில் சுமார் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்டோர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டது. 

 குறித்த திருப்பலிகளில் மன்னார் மறைமாவட்டத்தின் பங்குகளில் இருத்து தீர்மானிக்கப்பட்டவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதுடன் மன்னார் மாவட்டத்தில் நோய் தொற்றோடு இனம் காணப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மடுத்திருத்தலத்திற்குள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் திருத்தலத்தின் ஆடித்திருவிழா வழமை போன்று இடம் பெறுவதற்கான ஏற்பாடுக்ள முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசேடமாக நாட்டு மக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகப்பதற்கான விசேட வேண்டுதல் செபம் உருக்கமாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
                 






மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடித்திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல். Reviewed by Author on June 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.