அண்மைய செய்திகள்

recent
-

முடக்கல்நிலையை நீடிக்கவேண்டும் - ரணில்

மருத்துவர்களின் ஆலோசனைப்படி முடக்கல்நிலையை நீடிக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாம் திகதி 5000த்தை நெருங்கியது,20 நாட்களின் பின்னர் 8000த்தை நெருங்குகின்றது என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார். 

தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொவிட் 19 வேகமாக பரவுகின்றது அது மக்களை தாக்குவதை தவிர்க்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளே உடனடி தேவை என தெரிவித்துள்ள அவர் இதன் மூலம் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதையும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். 

அரசாங்கம் இந்த நோக்கங்களிற்காக பத்து நாள் முடக்கலை அறிவித்தது எனினும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி இந்த பத்து நாட்கள் போதுமானவை என தெரியவருகின்றது மேலும் இரண்டு மூன்று வாரங்கள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். முடக்கல்நிலை விதிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளை விட முடக்கல் நிலையை நடைமுறைப்படுத்தாமல் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்ற நிலையை எட்டிவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

முடக்கல்நிலையை நீடிக்கவேண்டும் - ரணில் Reviewed by Author on August 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.