அண்மைய செய்திகள்

recent
-

கீழடி அருகே நடைபெறும் அகரம் அகழாய்வில் உறை கிணறுகள் கண்டுபிடிப்பு

கீழடி அருகே அகரத்தில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை, மணலூா் ஆகிய பகுதிகளில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. 


இதில், சுடுமண் முத்திரை, காதணிகள், தந்தத்தினாலான பகடை, முதுமக்கள் தாழி, உருவப் பொம்மை, கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், பழங்கால மக்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள், நெசவுத் தொழிலுக்குப் பயன்படுத்தும் கருவிகள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன இந்நிலையில் அகழாய்வு நடைபெறும் அகரம் பகுதியில் உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
கீழடி அருகே நடைபெறும் அகரம் அகழாய்வில் உறை கிணறுகள் கண்டுபிடிப்பு Reviewed by Author on September 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.