அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்கா சென்ற தமிழ்நாடு நெல்மணி.. கார்பன் டேட்டிங் சோதனையில் என்ன நடந்தது? வெளியான ஆச்சர்ய முடிவு

தமிழ்நாட்டில் தாமிரபரணியை ஒட்டிய பொருநை ஆற்றங்கரை நாகரீகம் 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான கார்பன் டேட்டிங் ஆராய்ச்சி முடிவுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் வெளியிட்டார்.

 முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகள் குறித்து பார்க்கும் முன் கார்பன் டேட்டிங் முறை குறித்து சிறிய விளக்கத்தை பார்த்து விடலாம். அகழாய்வாராய்ச்சியில் எடுக்கப்படும் பொருள்களில் இருக்கும் ரேடியோ கார்பன் 14 எண்ணிக்கையை வைத்தே இந்த சோதனை செய்யப்படும். உலகின் பெரும்பாலான பொருட்களில் இந்த ரேடியோ கார்பன் 14 காணப்படும். 

காலம் செல்ல செல்ல, பொருட்களில் இதன் அளவு குறைந்து கொண்டே வரும். இந்த குறைந்த அளவை வைத்து அது எத்தனை காலம் பழமையானது என்று கண்டுபிடிக்க முடியும். 

பழமை 

ஒவ்வொரு பொருளிலும் இருக்க வேண்டிய கார்பன் 14 அளவோடு ஒப்பிட்டு குறைந்து போன கார்பன் 14 அளவை கணக்கிட்டு அதை வைத்து வயது கணக்கிடப்படும். சரியாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு பொருளில் கார்பன் 14 அளவு குறைவாக இருந்தால் அது மிக மிக பழமை வாய்ந்தது என்று அர்த்தம். அத்தனை காலம் இருந்த காரணத்தால் இதன் கார்பன் 14 அளவு குறைந்து இருக்கும். ஒவ்வொரு உயிரினத்திற்கும், பொருளுக்கும் half life என்ற கால அளவு இருக்கும். அதாவது அதில் இருக்கும் மொத்தம் கார்பன் 14 அளவு பாதியாக குறையும் காலம். 

அட்டவணை 

ஒவ்வொரு பொருளுக்கும் இந்த half life கணக்கிடப்பட்டு அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக அகழாய்வில் கிடைக்கும் பொருட்களுக்கும் அனைத்திற்கும் இதுபோன்ற கார்பன் 14 அளவு கணக்கிடப்பட்டு அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையோடு ஒப்பிட்டு ஒரு பொருள் எவ்வளவு அளவு கார்பன் 14ஐ இழந்துள்ளது என்று கண்டுபிடித்து அதை வைத்து வயதை கண்டுபிடிப்பார்கள். இதை கண்டுபிடிக்க நிறைய முறைகள் பயன்படுத்தப்படும். அறிவியல் ரீதியாக gas proportional counting, liquid scintillation counting, மற்றும் accelerator mass spectrometry ஆகிய முறைகளை பயன்படுத்தி கார்பன் டேட்டிங் கணக்கிடப்படும். 

கார்பன் டேட்டிங் 

இந்த கார்பன் டேட்டிங் முறை மூலம்தான் தமிழ்நாட்டில் கீழடி உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் எடுக்கப்பட்ட பொருட்களின் வயது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவரை இதற்காக மாதிரிகளை அனுப்பி சோதனை செய்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று விரிவான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஆதிச்சநல்லூர் சிவகளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நெல் மணிகள் அமெரிக்காவிற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் மியாமியில் உள்ள beta analytical laboratoryயில் செய்யப்பட்ட ஆய்வில் இந்த முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உமி நீக்கப்பட்ட நெல் ஆகும் இது. இங்கு செய்யப்பட்ட கார்பன் டேட்டிங் சோதனையில் இந்த நெல்மணிகள் காலம் கிமு 1155 என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பொருநை 

 இதன் மூலம் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகம் 3200 ஆண்டுகள் முற்பட்டது என்பதை இந்த சபையில் அறிவிப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். தமிழ்நாட்டில் தாமிரபரணியை ஒட்டிய பொருநை ஆற்றங்கரை நாகரீகம்தான் இது. இதன் மூலம் நாம் மிகவும் செழிப்புடன் வாழ்ந்தது இந்த ஆய்வில் தெரிய வந்தது. மேலும் கீழடியில், அரிய அணிகலன்கள், கல் மணிகள், சுவர்கள், காளையின் எலும்புகள், சிந்து சமவெளி நாகரீக ஒற்றுமைகள், கருப்பு சிவப்பு நிறம் கொண்ட பானைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

கீழடி 

இங்கு பல நாணயங்கள் கிமு 4ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு பொருட்களின் அடிப்படையில் கீழடி நாகரீகம் கிமு 6ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கார்பன் டேட்டிங் சோதனையில் உறுதி செய்யபட்டுள்ளது. அகழாய்வுகளில் செய்யப்பட்ட கார்பன் டேட்டிங் சோதனை முடிவின் படி கொற்கை துறைமுகம் கிமு 8ம் நூற்றாண்டுக்கு முன்பே செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.





அமெரிக்கா சென்ற தமிழ்நாடு நெல்மணி.. கார்பன் டேட்டிங் சோதனையில் என்ன நடந்தது? வெளியான ஆச்சர்ய முடிவு Reviewed by Author on September 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.