அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஆலயங்களில் இடம் பெறுகின்ற சாதாரண திருப்பலி மற்றும் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை-

மன்னாரில் எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை தடை செய்யுமாறும், திருப்பலிகள் மற்றும் பூஜை வழிபாடுகளில் விடுதலைப் புலிகளின் இறந்த மாவீரர்களின் நினைவேந்தல்கள் இடம் பெற உள்ளதாகவும் கூறி மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளடங்களாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (19) மன்னார் நீதிமன்றத்தில் விசேட விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தனர்

 இந்த நிலையில் குறித்த விண்ணப்பம் பகுதியளவில் ஏற்று கொள்ளப்பட்டதுடன் ஆலயங்கள் மற்றும் சமய வழிபாடுகளில் நீதி மன்றம் தலையிட முடியாது எனவும் கொரோன தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு ஏற்ப வழமையான முறையில் வழிபாடுகள் மற்றும் சமய அனுஸ்ரானங்களை மேற்கொள்ளுமாறும் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி பெருமாள் சிவகுமார் கட்டளை ஒன்றை பிறப்புத்துள்ளதாக சட்டத்தரணி செல்வராஜ் டினேஸன் தெரிவித்தார்.

 இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளடங்களாக சிலாவத்துறை, முருங்கன், இலுப்பைக்கடவை உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (19) மன்னார் நீதிமன்றத்தில் இலங்கை குற்றவியல் நடவடிக்கை கோவை பிரிவு 106 இன் கீழ் ஒரு விசேட விண்ணப்பம் ஒன்றை செய்திருந்தனர். -குறித்த விண்ணப்பத்தில் குறிப்பாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெறும் திருப்பலிகள் மற்றும் ஏனைய ஆலயங்கள் சிலவற்றில் இடம்பெறும் பூஜை வழிபாடுகளை தடை செய்யுமாறும், குறித்த திருப்பலிகள் மற்றும் பூஜை வழிபாடுகளில் விடுதலைப் புலிகளின் இறந்த மாவீரர்களின் நினைவேந்தல்கள் இடம் பெற உள்ளதாகவும் கூறி நாளை சனிக்கிழமை 20 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை தடை செய்யுமாறு விண்ணப்பம் செய்திருந்தனர். 

 பொலிஸாரின் விண்ணப்பத்திற்கு எதிராகவும் பொது மக்கள் நலன் கருதியும் சட்டத்தரணிகள் இணைந்து விண்ணப்பம் செய்திருந்தனர். குறிப்பாக சுகாதார வழி நடைமுறைகளுக்கு அமைவாகவும், அதனை மீறாத வகையில் தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகின்றமையினால் சுகாதார வழி முறைகளை மீறாத வகையிலும், ஆலயங்களில் இடம்பெறும் நாளாந்த திருப்பலி,பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளுவதற்கு தடை விதிக்காத வகையில்,இலங்கை அரசியல் அமைப்பில் காணப்படுகின்ற அடிப்படை உரிமைகளை மீறாத வகையில் அடிப்படை உரிமை சுதந்திரத்தை பாதிக்காத வகையில் சமய வழிபாடுகள் மற்றும் யுத்தத்தின் போது இறந்த உறவுகளை நினைவேந்துகின்ற நடவடிக்கைகளையும் தடை செய்யாத வகையில் கட்டளை ஒன்றை பிறப்பிக்க நீதவானிடம் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். 

 பொலிஸாரின் விண்ணப்பத்திற்கு அமைவாக விடுதலைப்புலிகளின் நினைவேந்தல் அல்லது கொடி,சின்னங்களை பயன்படுத்தி எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது என்று நீதவான் கட்டளை பிறப்பித்தார். மேலும் ஆலயங்களில் இடம் பெறுகின்ற சாதாரண திருப்பலி மற்றும் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை என்றும், கண்டிப்பாக சுகாதார வழி முறைகளை உரிய முறையில் பின் பற்றி நாளாந்த பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.













மன்னாரில் ஆலயங்களில் இடம் பெறுகின்ற சாதாரண திருப்பலி மற்றும் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை- Reviewed by Author on November 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.