அண்மைய செய்திகள்

recent
-

கோவை மாணவி தற்கொலை விவகாரம் - தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது

கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டார். கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதியின் மகள், ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு திடீரென வேறு பள்ளியிலும் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அந்த மாணவி வியாழக்கிழமை மாலையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த விவகாரத்தில் சின்மயா பள்ளி இயற்பியல் ஆசிரியர், மிதுன் சக்கரவர்த்தி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக மாணவி எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது. ஆர்.எஸ்புரம் காவல்நிலையத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகாருக்கு ஆளான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உடந்தையாக செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

 இதற்கிடையே, ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவையில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் சின்மயா பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களுரில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் இருந்து கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் அழைத்து வரப்படுகிறார்

கோவை மாணவி தற்கொலை விவகாரம் - தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது Reviewed by Author on November 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.