அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி இளைஞர் ஒருவருடன் வரும் (CCTV) காட்சி வெளியானது.

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் இன்று சனிக்கிழமை (13) காலை சடலமாக கரை ஒதுங்கிய யுவதி, மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் இளைஞர் ஒருவருடன் நடந்து வருகின்ற சீ.சீ.ரி.வி (CCTV) காட்சி வெளியாகியுள்ளன. குறித்த காட்சியானது கடந்த வியாழக்கிழமை (11) மாலை பதிவாகி உள்ளது. குறித்த யுவதியும்,இளைஞர் ஒருவரும் முகக்கவசம் அணிந்து நடந்து வருகின்ற காட்சி பதிவாகி உள்ளது. 

 இந்த நிலையில் அன்றைய தினம் வியாழக்கிழமை (11) மாலை 7 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து பெண் ஒருவர் கடலில் குதித்ததாக நேரில் கண்டவர் மீனவர் ஒருவர் பொலிசாரிடம் தெரிவித்த நிலையில் பொலிஸாரும்,கடற்படையினரும் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது. எனினும் எவரும் மீட்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று சனிக்கிழமை (13) காலை யுவதி ஒருவர் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் சடலமாக கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. எனினும் இது வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.
                 
மன்னாரில் கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி இளைஞர் ஒருவருடன் வரும் (CCTV) காட்சி வெளியானது. Reviewed by Author on November 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.