அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் - இலுப்பைகடவையில் நடந்த விபத்து 2 வருடங்களின் பின் தோண்டி எடுக்கப்பட சடலம்

 மன்னார் நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான ஒரு வழக்குடன் தொடர்புபட்டு பின்னர் உயிரிழந்த ஜேசுதாசன் ரஞ்சித்குமார் என்பவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.


குறித்த நபர் (வயது 42) என்பவர் கடந்த 2022.06.13 அன்று உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் - கல்லூண்டாயில் உள்ள சேமக்காலையில் அவரது உடலம் அடக்கம் செய்யப்பட்டது.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,




கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மன்னார் - இலுப்பை கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.



அதன்பின்னர் நவாலி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்திலும் வழக்கு இடம்பெற்று வந்துள்ளது.


இந்நிலையில் அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக வைத்தியர் ஒருவர் தெரிவித்ததோடு, கிராம சேவகரும் அதற்கு இணங்க பூர்வாங்க செயற்பாடுகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இது இவ்வாறு இருக்கையில் குறித்த நபர் மீதான விபத்து மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நபர் அங்கு பிரசன்னமாகவில்லை.


அத்துடன்,குறித்த நபர் உயிரிழந்து, அவரது சடலம் யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்ட விடயம் அதன்பின்னரே நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





மன்னார் - இலுப்பைகடவையில் நடந்த விபத்து 2 வருடங்களின் பின் தோண்டி எடுக்கப்பட சடலம் Reviewed by Author on January 04, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.