மன்னாரில் செப்புக் கம்பி மற்றும் தொலைபேசி கேபில்களுடன் இருவர் கைது
மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இன்று (10)மன்னார் ஜிம்ரோ நகர் பகுதியில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200 கிராம் செம்பு கம்பி மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 19 வயதுடையவர்கள் என்று தெரிய வருகிறது
குறித்த சந்தேக நபர்களை மாவட்ட குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி உ.பொ.ப மதுர௩்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர்.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால வின் உத்தரவுக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
மன்னாரில் செப்புக் கம்பி மற்றும் தொலைபேசி கேபில்களுடன் இருவர் கைது
Reviewed by Vijithan
on
May 10, 2025
Rating:

No comments:
Post a Comment