இலங்கையர்களுக்கு விசா கட்டுபாடு விதிக்கவுள்ள பிரித்தானியா!
வேலை மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இலங்கையர்கள், பாகிஸ்தானியர்கள் மற்றும் நைஜீரியர்கள் உள்ளிட்டவர்களின் விசா விண்ணப்பங்களை பிரித்தானியா கட்டுப்படுத்தவுள்ளது.
விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
வேறு நாடுகளில் இருந்து வருவோர் பிரித்தானியாவில் அதிக நாட்கள் தங்கிருந்து புகலிடம் கோர வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசாக்களை முறைகேடாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான புதிய அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் அதிகளவில் புகலிடக் கோரிக்கைகள் உள்ள நாடுகளைச் சேர்ந்த ஒருவர் சுயவிவரப்படிவத்தில் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை விசா விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் வங்கி அறிக்கைகளைப் பயன்படுத்தி, தாங்கள் ஆதரவற்றவர்கள் என்வும், ஹோட்டல்கள் போன்ற வரி செலுத்துவோர் நிதியளிக்கும் தங்குமிடம் தேவை எனவும் கூறுவதை நிராகரிப்பார்கள் என தெரிவிக்கபடுகிறது.
Reviewed by Vijithan
on
May 07, 2025
Rating:


No comments:
Post a Comment