அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இந்து மதபீடத்தின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மன்னார் இந்து மதபீடத்தின் சார்பில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளை தெரிவித்துக் கொள்வதாக மன்னார் இந்து மத பீடத்தின் தலைவர் செந்தமிழருவி கலாநிதி சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக் குருக்கள் தெரிவித்துள்ளார் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில் நம்மைச் சுற்றி எப்போதுமே நேர்மறை சிந்தனை. ( positive thinking)இருந்தால், நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தைச் செய்வோம்.

 நேர்மறையாகவும் வித்தியாசமாகவும் சிந்தித்தவர்களே வெற்றிகளைக் குவித்திருக்கிறார்கள். அதனால் எப்போதும் எதிர் மறையாக (negative thinking)) இல்லாமல் செயல்பட்டால் வெற்றி மட்டும்தான். அதேபோல, வெற்றியை மட்டுமே நோக்கமாகக்கொண்டு மகிழ்ச்சியை ஒருநாளும் குறைத்துக்கொள்ளாதீர்கள். நம்முடைய ஒவ்வொரு நாளையும் நேர்மறை சிந்தனையாக மாற்ற, நாம் மகிழ்ச்சியாக இருப்பது அவசியம். கூடுதலாக, அன்பு செலுத்தவும் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், சில நேரங்களில் அறிவால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாது. 

சிலவற்றை அன்பால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அன்பு உங்களிடத்திலிருந்தே ஆரம்பிக்கட்டும்! மலரும் இந்த புத்தாண்டில் மங்களங்கள் பெருகட்டும் வளரும் இந்த புத்தாண்டில் செல்வங்கள் வளரட்டும் கொடிய கொரோனா நோய்த் தொற்று ஒழித்து உலகம்முழுவதும் இயல்பான நிலைக்கு.திரும்பி நல்லதே நடக்க அனைவரும் சேர்த்து இன்புற்று வாழ்வோம் மலரும் இந்த ஆங்கில புத்தாண்டில் மனித நேயத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்வோம் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்மன்னார் இந்து மதபீடத்தின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தி Reviewed by Author on December 31, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.