அண்மைய செய்திகள்

recent
-

போருக்கு எதிராக வீதியில் இறங்கிய ரஷ்யர்கள்; தாக்குதல்களை தொடரும் ரஷ்யா

Colombo (News 1st) உக்ரைன் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான ரஷ்ய பிரஜைகள் இணைந்துகொண்டுள்ளனர். யுத்தம் புரிய வேண்டாம் என வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு, மொஸ்கோவிலும், St. Petersbur-கிலும் மக்கள் பேரணியாகச் செல்லும் படங்கள் வௌியாகியுள்ளன. ரஷ்யாவின் தென் பிராந்தியமான சைபீரியாவிலுள்ள பனி நகராகிய Novosibirsk-இலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. போராட்டங்கள் இடம்பெறும் போது மிக அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

 அத்துடன், போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த1800-க்கும் அதிகமானவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். உக்ரைனின் தென் பிராந்திய நகராகிய மெலிடோபோலை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதனிடையே, உக்ரைன் தலைநகர் Kyiv-இன் தென்மேற்கு பிராந்தியத்தை இரண்டு ஏவுகணைகள் தாக்கியுள்ளன. தலைநகரில் விமான நிலையம் அருகேயுள்ள பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தை இந்த ஏவுகணைகள் தாக்கியுள்ளன. இதனிடையே, உக்ரைனுக்கு இராணுவ ஆயுதங்களையும் கருவிகளையும் பிரான்ஸ் அனுப்பியுள்ளது. 3,500-க்கும் அதிகமான ரஷ்ய படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 200 படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது. 

 அத்துடன், ரஷ்யாவின் 14 போர் விமானங்கள் 08 ஹெலிகொப்டர்கள் மற்றும் 102 டாங்கிகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், எந்தவொரு இழப்பையும் ரஷ்யா இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதேவேளை, தமது இராணுவத்தை ரஷ்ய படைகளிடம் சரணடையுமாறு தாம் தெரிவித்ததாக வௌியாகும் தகவல்களை உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy நிராகரித்துள்ளார். உக்ரைனை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா அவருக்கு வழங்கவிருந்த உதவியையும் அவர் நிராகரித்துள்ளார். இதேவேளை, தமது சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்கும் பணமீட்டுவதற்கும் ரஷ்ய அரச ஊடகத்திற்கு தடை விதிப்பதாக Facebook, Instagram, WhatsApp ஆகியவற்றின் தாய் நிறுவனமான Meta அறிவித்துள்ளது

.
போருக்கு எதிராக வீதியில் இறங்கிய ரஷ்யர்கள்; தாக்குதல்களை தொடரும் ரஷ்யா Reviewed by Author on February 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.