அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மண்ணில் யுத்த கால கட்டத்தில் சிறப்பாக கல்வி பணியாற்றிய ஒரு கல்விமான் ஜனாப் ஏ.சி.அப்துல் ஹக்-ஆயர் வணக்கத்திற்குரிய இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை

மன்னார் மண்ணில் கடினமான ஒரு காலப் பகுதியில் பயங்கரமான ஒரு யுத்த கால கட்டத்தில் சிறப்பாக கல்வி பணியாற்றிய ஒரு கல்விமான் முன்னை நாள் மன்னார் பிராந்திய கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஏ.சி.அப்துல் ஹக் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். முன்னை நாள் மன்னார் பிராந்திய கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஏ.சி.அப்துல் ஹக் அவர்களின் 10 வது ஆண்டு நினைவு மலரான 'கல்வியாளர் ஹக் சேர்' எனும் பெயரில் அருட்திரு.தமிழ் நேசன் அடிகளாரினால் எழுதப்பட்ட நினைவு மலர் இன்று வெள்ளிக்கிழமை (11) மாலை 4 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. 

இதன் போது குறித்த நினைவு மலரை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைத்த பின் உரை நிகழ்த்துகையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,,,, முன்னை நாள் மன்னார் பிராந்திய கல்விப்பணிப்பாளர் ஜனாப் ஏ.சி.அப்துல் ஹக் அவர்களின் பெயரால் நாங்கள் ஒன்று கூடியுள்ளோம். அவரைப் பற்றிய நினைவுகளை நாம் பகிர்ந்து கொண்டுள்ளோம். 

மன்னார் மண்ணில் கடினமான ஒரு காலப் பகுதியில் பயங்கரமான ஒரு யுத்த கால கட்டத்தில் சிறப்பாக கல்விப் பணியாற்றிய ஒரு கல்வி மானை நாங்கள் இன்று நினைவு கூர்ந்துள்ளோம். -அந்த காலம் எப்படியான காலம் என்று நாம் சிந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்கள் ஒன்றாக இருந்த காலத்தில் இவர் கல்வி பணியாற்றியுள்ளார். -ஒரு பக்கம் விடுதலைப் புலிகளின் அரசாங்கம்,மறுபக்கம் இலங்கை அரசாங்கம். இவை இரண்டிற்கும் மத்தியில் ஈடு கொடுத்து திறமையாகவும், சாதூரியமாகவும் பணியாற்றியுள்ளார். -அவருடைய சிறப்பான பண்புகளை பலரும் கூறுவதை கேட்டோம்.இப்படியான நல்லவர்கள் மற்றும் வள்ளவர்களின் நினைவுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். 

இந்த நினைவு மலர் அவருடைய நினைவுகளை தாங்கி உள்ளது.10 வது ஆண்டு நினைவாக வெளியிடப்பட்ட குறித்த நூலிலே பலரது ஆக்கங்கள் உள்ளமையினால் இதனை சிறப்பாக தொகுத்து வெளியிட்ட ஆசிரியருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இப்படிப்பட்டவர்களின் நினைவுகள் அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். இதைத்தான் நாங்கள் இவ்வாறான நிகழ்வு மற்றும் நூல் வழியாக செய்ய முயற்சிக்கிறோம்.என அவர் மேலும் தெரிவித்தார். அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவு மலர் வெளியீட்டு விழாவில் விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை , மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி தேவராஜா தேவதயாழினி, மன்னார் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர்களான எஸ்.எம்.குரூஸ்,வி.விஸ்வலிங்கம் உற்பட முன்னை நாள் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டு நினைவு மலரை பெற்றுக் கொண்டனர்.















மன்னார் மண்ணில் யுத்த கால கட்டத்தில் சிறப்பாக கல்வி பணியாற்றிய ஒரு கல்விமான் ஜனாப் ஏ.சி.அப்துல் ஹக்-ஆயர் வணக்கத்திற்குரிய இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை Reviewed by Author on March 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.