வவுனியாவில் பயங்கர ஆயுதங்களுடன் ஆவா குழு கைது -மன்னார் இளைஞனும் உள்ளடக்கம்
இதனையடுத்து விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட 16 பேரும் ஓமந்தைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்கள், பதாகைகள், கைத்தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வவுனியா மருதங்குளம், அரசன்குளம், கோவில்குளம், கோழியாகுளம், சாஸ்திரிகூழாங்குளம், நெளுக்குளம், ஓமந்தை மற்றும் முல்லைத்தீவு, தலைமன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த 18 தொடக்கம் 26 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் எனவும், இருவர் 44 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் வவுனியாவைச் சேர்ந்தவர்கள், நால்வர் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள், இருவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது
வவுனியாவில் பயங்கர ஆயுதங்களுடன் ஆவா குழு கைது -மன்னார் இளைஞனும் உள்ளடக்கம்
Reviewed by Author
on
May 02, 2022
Rating:

No comments:
Post a Comment