இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் கைது
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் இந்திய கடற்படையினர் கைது செய்து காரைக்கால் துறைமுகத்தில் இன்று திங்கட்கிழமை (2) மதியம் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் கடலோர காவல் குழும ஆய்வாளர் ராஜா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள், இலங்கை திருகோணமலையை சேர்ந்த அனுரா என்பவருக்குச் சொந்தமான படகில் கடந்த 21ம் தேதி திருகோணமலையில் இருந்து மீன் பிடிக்க வந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்தமை தெரிய வந்தது.
இதையடுத்து மதுஷா,அமிலா மசங்கா, சுஜித் பண்டாரா, புதிகா, உஷன் மதுசன், துங்கா மகேலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நாகை கடலோர காவல் குழும போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் கைது
Reviewed by Author
on
May 02, 2022
Rating:

No comments:
Post a Comment