குருந்தூர் மலை விகாரை உள்ளிட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிவான் உத்தரவு!
அத்துடன், குறித்த பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் குறித்த இடத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையில் காவல்துறையினர் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனவும் நீதிவான் தமது தீர்ப்பில் அறிவித்துள்ளார்.
மேலும் குறித்த பகுதியானது தொல்லியல் திணைக்களத்தின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுவதால் அந்த பிரதேசம் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்து அது தொடர்பாக அறிக்கையிடுமாறு தொல்லியல் திணைக்களத்துக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குருந்தூர் மலை விகாரை உள்ளிட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிவான் உத்தரவு!
Reviewed by Author
on
July 14, 2022
Rating:

No comments:
Post a Comment