அண்மைய செய்திகள்

recent
-

அழகிய இலங்கை அரசியலால் அழுக்காவது ஏன்?

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கை ஒரு அழகியநாடாக சர்வதேச அரங்கில் காட்சியளித்தது எனினும்காலத்திற்கு காலம் அரசியல் கதிரையில் அமர்கின்றவர்களால்இலங்கையின் அழகு அழுக்காக மாறியுள்ளது. இலங்கை ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக கடந்தகாலத்தில் இருந்தாலும் தற்போது உலகின் பணவீக்க வீதம்அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவதுஇடத்தை பிடித்துள்ளது.நாட்டில் ஒரு போதும் இல்லாதுஅந்நியச் செலாவணி வீதம் குறைவடைந்து, இறக்குமதிகுறைவடைந்து, அத்தியாவசிய பொருட்கள் தொடக்கம்ஆடம்பர பொருட்கள் வரை விலை உயர்வடைந்துபொதுமக்கள் நடுத்தெருவில் வாழ்நாளை கழிக்கின்றநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் வரிசைகளில்உயிரிழக்கின்ற நிலையை காண்கின்றோம். மாணவர்களின்கல்வி பாதிக்கப்பட்டு அவர்களுடைய எதிர்காலம்நடுத்தெருவிற்கு வந்துள்ளது. 

நாடு நாளுக்கு நாள் அனைத்துதுறையிலும் பின் தள்ளப்படும் போதும் தனக்கு என்னஆகப்போவது என்றவாறு அரசியல்வாதிகள் இருப்பதை காணமுடிகின்றது. இதற்கெல்லாம் என்ன தீர்வு என்பது தான்ஒட்டுமொத்த மக்களுடைய இன்றைய கேள்வி. மக்களின் உரிமைகளை வென்றெடுக்க மக்கள் தற்போதுஅவதாரம் எடுத்துள்ளதை நாளுக்கு நாள் சூடு பிடித்துள்ளபோராட்டங்கள் உணர்த்துகின்றன. காலி முகத்திடலைமையமாக வைத்து உருவாகியுள்ள "கோட்டா கோ கம" போராட்டக் களம் இலங்கையின் சமூக அரசியல் வரலாற்றில்மிக முக்கியமான திருப்பு முனையாக அமைந்துள்ளது. 

இலங்கை வரலாற்றில் இவ்வாறான ஒரு மக்கள் எழுச்சிபோராட்டம் இடம்பெற்றதாக சரித்திரத்தில் இல்லை. இந்தமக்கள் உரிமைப் போராட்டம் இலங்கையின் அரசியல்கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை எதிர்காலத்தில் கொண்டுவரும் என்பது தெளிவானது. நாட்டின் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளுகைகட்டமைப்பில் ஏற்பட்ட தொடர்க் குறைபாடுகளும், பலவீனமான அரசியல் தலைவர்களுமே காரணமென மக்கள்தொடர்ந்து கூறி வருகின்றனர் .இதுவரை காலமும் கோட்பாடுரீதியாக இருந்த ஜனநாயகம் இன்று புதிய பாதையை நோக்கிநகர்கின்றது. போராட்ட களத்தின் நடைமுறைகள், ஒழுங்குவிதிகள், ஒழுக்கம் பண்பாடு ,பரஸ்பர மரியாதை, பன்மைத்துவம், பெண்ணுரிமை, மதசகிப்புத்தன்மை போன்றஅனைத்து காரணிகளோடு இனவாதம் அற்ற இலங்கையைஜனநாயகத்தோடு நோக்குவதற்குமான ஒரு பரந்த வாய்ப்பினைஅளித்துள்ளது.

 கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர்ஜனநாயகத்தின் மீதும் இலங்கை சிறுபான்மை மக்கள் மீதும்பாரிய அளவிலான இன்னல்களை செய்தார் என்பதுநிரூபிக்கப்பட்டுள்ளது.இதனை அரசியல் ஆய்வாளர்களும், முழுசர்வதேசமும் அவதானித்ததோடு எதிர்ப்பை தெரிவித்தனர். இதனாலே இன்று நாடு படுகுழியில் விழுந்துள்ள நிலையில்எந்த ஒரு சர்வதேச நாடுகளும் உதவிக்கு முன்வருவதில்லை. பதவியேற்ற உடனே நாட்டில் உள்ள பெரும்பான்மையைவைத்து சிறுபான்மையினரை அழிக்க பல்வேறு திட்டங்களைபோட்ட ஜனாதிபதியாக கோட்டா இருக்கின்றார் .இதனாலேஅன்று அவருக்கு ஆதரவு வழங்கிய 69 இலட்சம்மக்களினாலேயே கோ கோட்ட என துரத்திஅடிக்கப்படுகின்றார்.

 இலங்கையின் அரசியல் வரலாற்றில்பதவிக்கு வந்து 23 மாதங்களில் மக்களின் எதிர்ப்பைசம்பாதித்து கொண்ட ஒரே ஜனாதிபதியாக கோத்தபயராஜபக்ஷ பதிவாகியுள்ளார். இவரை பதவிக்கு கொண்டுவர பெரும்பான்மை சிங்களமக்களும், பௌத்தப்பிக்குகளும் பிரதானமானவர்களாகஇருந்தார்கள். இந்த நாட்டில் ஏற்பட்ட அனைத்துபிரச்சனைகளுக்கும் முஸ்லிம்களும் ,தமிழ் மக்களும்மாத்திரமே காரணம் எனவும் இந்த நாட்டைசிறுபான்மையினரின் ஆதிக்கத்திலிருந்து கட்டுப்படுத்த தூயபௌத்த இனத்தை சேர்ந்த ஒருவரை தலைவராக வரவேண்டும்என கோட்டாபயவை தேர்வு செய்தனர். கடந்த 30 வருட காலயுத்தத்தை வெற்றி கொண்ட ஒரே காரணத்தை வைத்துபெரும்பான்மை மக்கள் இவரை வாக்கிட்டு தெரிவு செய்தனர். பெரும்பான்மை இனத்தை சேர்ந்த எத்தனையோ பேரை இந்தகோட்டா பாதுகாப்பு அமைச்சராக இருந்த வேலையில்கொலை செய்ததற்கு ஆதாரங்கள் உண்டு எனினும் மீண்டும்இவரையே பெரும்பான்மை மக்கள் ஆதரித்தார்கள்.

இதன்மூலம் பெரும்பாண்மை சமூகம் ஒரு முட்டாள் சமூகம் என்பதைமீண்டும் நிரூபித்துள்ளது. இலங்கை சுமார் 90 ஆண்டுகளாக பிரதிநிதித்துவஜனநாயகத்தினை அனுபவித்து வந்தாலும் இடையில்இனவாதம் காற்றோடு காற்றாக பரவியதால் மக்கள் இன்னும்ஜனநாயகத்தின் பெருமதியினை சரியாக உணரவில்லைஎன்பதே உண்மை. தற்போது நாட்டின் பொருளாதாரநெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ராஜபக்சகுடும்ப ஆட்சியை ஆதரித்த பெரும்பான்மை மக்கள் மிகமுக்கிய காரணமாக இருக்கின்றார்கள். 

 எனவே இந்த பாரியநெருக்கடிக்கு ராஜபக்ஷ குடும்பத்தினரும் அவர்களை ஆதரித்தபெரும்பான்மை சமூகமுமே பிரதான காரணம் என்பது தெட்டத்தெளிவானது. தொடர் போராட்டங்களில் படித்த மத்திய தர வகுப்பு, நகர்ப்புறஇளைஞர், யுவதிகள், கிராமிய இளைஞர், யுதிகள், விவசாயிகள் தொழில் வல்லுனர்கள், ஆசிரியர் சமூகம், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், அரச அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிறுபான்மையினர் எனஅனைவரும் பங்கெடுத்து வருவதை காண முடிகின்றது.

 "போராட்டங்களில் மக்களின் குரல் மழுங்கடிக்கப்படுகின்றபொழுது அல்லது அலட்சியம் செய்யப்படுகின்ற பொழுதுஎழுச்சி பெறுகின்றது என மாட்டின் லூதர் கிங் தெரிவித்துள்ளகூற்றை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமாகும் எனநினைக்கிறேன். தான் தோற்றுப் போன ஜனாதிபதியாக வெளியேற மாட்டேன்என கோத்தா தெரிவித்திருந்தார். எனினும் நாட்டின் நிர்வாகசெயல் திறன் பற்றி எந்த விதமான அக்கறையும் இல்லாமல்ராஜபக்ஷ குடும்பத்துக்கு என்ன என்ன செய்ய முடியுமோ அதைஎல்லாம் செய்து முடித்தார். உயர்ந்த பதவிகளைராஜபக்ஷர்களுக்கு வழங்கினார். 19வது திருத்தம் இல்லாதுஒழிக்கப்பட்டு இருபதாவதை கொண்டு வந்தார். 

சர்வதேசகொள்கை பற்றிய ஒரு தெளிவான கொள்கையற்ற ஆட்சியாககோட்டாவின் ஆட்சி அமைந்துள்ளது. இந்தியாவும் ,சீனாவும்தன்னுடன் கைகோர்த்து இருக்கும் வரை தமக்கு தோல்விஇல்லை என ராஜபக்சர்கள் கனவு கண்டிருந்தனர். தேரர்களின்ஆலோசனைகளை நம்பி மோசம் போனார்கள். தன்னைப்போன்ற வேறு எந்த ஆட்சியாளனும் இலங்கையை ஆட்சிசெய்ய முடியாது என்ற தலைக்கனத்துடன் பதவியேற்றுதன்னைப் போன்று வேறு எந்த ஆட்சியாளனும் இந்த நாட்டைஅழித்திருக்க முடியாது என்ற நிலைக்கு நாட்டைதள்ளியுள்ளார். இவ்வாறான இனவாத கொள்கையேகோத்தாவின் ஆட்சி தோற்றுப் போக காரணமாக அமைந்ததுஎன்பது கசப்பான உண்மை. 

இனி ராஜபக்சர்கள் இந்தஅரசியலுக்கும் வேண்டாம் ,நாட்டுக்கும் வேண்டாம் என்றநிலையில் மக்கள் அவர்களுக்கு எதிராக களம்இறங்கியுள்ளனர். தான் பற்றவைத்து குளிர் காய்ந்தநெருப்பே தனக்கு எதிராக எரிவதையும் அதில் கொஞ்சம்கொஞ்சமாக தான் அழிந்து கொண்டிருப்பதை இந்தராஜபக்ஷர்கள் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. மிகவிரைவில் புரிந்து கொள்வார்கள்.அந்த நாள் மிக விரைவில். 

  ஒரு ஜனநாயக அரசியல் முறைமையில் எதிர்க்கட்சி என்பதுஇன்றியமையாத ஒன்று. எதிர்க்கட்சி என்பது சில சமயங்களில்மாற்று அரசாங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது எந்தஒரு சமயத்திலும் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நாட்டைநிர்வகிக்கும் தயார் நிலையில், நிழல் அரசாங்கம் ஒன்றைகொண்டிருக்க வேண்டும். அப்போது தான் நாட்டில்ஜனநாயகம் தழைக்கும். எதிர்க்கட்சியின் பிரதான பொறுப்புகளில் ஒன்று அரசின்தவறான கொள்கை மற்றும் செயற்பாடுகளை சுட்டிக்காட்டி, நாட்டை சீரான வழியில் இட்டுச் செல்வதற்கானஆலோசனைகளை முன்வைக்க வேண்டும்.

 அரசுமேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளையும் எதிர்த்து, எவ்வாறாயினும், எவ்வழியிலேனும் ஆட்சியை கைப்பற்றியேஆக வேண்டும் என்ற மனநிலை, எதிர்க்கட்சியின் வீழ்ச்சிக்கேவழிவகுக்கும்; மக்கள் மத்தியில் செல்வாக்கையும்இழந்துவிடும். ஓர் அரசாங்கத்திற்கு எவ்வாறு பொறுப்புணர்ச்சி மற்றும்பொறுப்புக்கூறல் உள்ளனவோ அதேபோல் எதிர்க்கட்சிக்கும்உண்டு என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை மிக மிக அவசியம். 

 இவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், நாட்டில் எதிர்க்கட்சி என்று ஒன்றுள்ளதா என்று நினைக்கதோன்றுகிறது. நேற்று எதிர்க்கட்சியில் இருந்தவன், பதவிக்காக, இன்று அரசுடன் இணைந்து கொள்கிறான். ஜனநாயகத்தில் இது அனுமதிக்கப்பட்டதே என்றாலும், நம்பிவாக்களித்த மக்களின் விருப்புக்கு எதிராக செயல்படுகின்றனர்என்பது தெளிவு. இலங்கையை பொருத்தமட்டில், ஆளும் கட்சி மற்றும்எதிர்க்கட்சி ஆகியவற்றுக்கு இடையே கொள்கைவித்தியாசத்தை காண்பது அரிது. ஒவ்வொரு தேர்தலிலும்முகங்கள் மாறுகின்றனவே அன்றி சிஸ்டம்மாறுவதுகிடையாது. சுதந்திர இலங்கையில் உண்மையிலேயே ஒரு பாரியபொருளாதார முறைமை மாற்றம் ஏற்பட்டது என்றால் அது 1978 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக்கொள்கை எனலாம். 

இதனை கடுமையாக எதிர்த்த அன்றையஎதிர்க்கட்சி, அதன் பின் பல முறை ஆட்சியை கைப்பற்றி, நாட்டின் இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்கு அந்த திறந்தபொருளாதாரக் கொள்கையே காரணம் என்று தொடர்ந்தும்குற்றம்சாட்டிய போதிலும், அந்த முறைமையை மாற்றுவதற்குஎந்த முயற்சியும் எடுக்கவில்லை. இன்றளவிலும் அதேபொருளாதார சிஸ்டம் தான் நடைமுறையில் உள்ளது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால், எதோ இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு எதிர்க்கட்சி உள்ளதே அன்றி, உண்மையில் அவ்வாறான ஒன்று இல்லை என்பதே யதார்த்தம். 

 இன்றைய போராட்டங்கள் பல முக்கியமான விடயங்களைவெளிப்படுத்தி நிற்கின்றன. அந்தவகையில், மரபு ரீதியானஅரசியல் தலைமைத்துவம் மீதான அவநம்பிக்கை, பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீதான அதிருப்தி, ஊழல்மோசடிகள் நிறைந்த அரசியல் கலாசாரம் மீதான விரக்திபோன்ற பல விடயங்களை அவதானிக்க முடியும். இன்றுஅரசியல்வாதிகள் மாத்திரமல்ல, அரசியல் கட்சிகளும்முற்றாகவே நம்பிக்கையை இழந்துள்ளன. 

 ஆகவேதான் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வீடு செல்லவேண்டும் என்ற கோ கோம் கோட்டா எழுச்சி பெற்றுள்ளது. அரசாட்சியில் பொதுமக்களின் நம்பிக்கை என்பதுஅடிப்படையானதாகும். மக்களின் ஒரே கோரிக்கை இந்த கொடுங்கோல்ஆட்சியாளர்களான ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியை விட்டுவெளியேறி செல்ல வேண்டும் என்பது தான்.இதனையே மக்கள்தொடர் போராட்டங்களின் மூலம் உணர்த்துகின்றனர்.கடந்தமே 9 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ குழுவினரால்போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கப்பட்டு நாட்டின்அனைத்து பகுதியிலும் கலவரம் வெடித்தது நாம்அறிவோம்.அதன் பின்னர் பிரதமர் பதவியை மஹிந்த மற்றும்நிதி அமைச்சர் பதவியை பெசில் ராஜபக்ஷ உட்படதுறந்தனர்

.எனினும் கோட்டா வெளியேறு என்பதே மக்களின்கோஷம் எனவே கடந்த 9 ஆம் திகதி திரண்ட மக்கள் நாட்டில்பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.மக்களின்தியாக போராட்டத்திற்கு பாரிய வெற்றிகிடைத்துள்ளது.கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகைகைப்பற்றப்பட்டதுடன், போராட்டக்காரர்களினால் பல்வேறுநிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது.அதில் குறிப்பாகஜனாதிபதி கோட்டாபய பதவி விலக வேண்டும் என்பதேபிரதானமானது.சனிக்கிழமை மாலை இடம்பெற்ற கட்சிகலந்துரையாடலில் தான் 13 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகபதவியை துறப்பாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இலங்கை1947 இற்கு பின்னர் இரண்டாவது முறையாக சுதந்திரம்அடைந்துள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.இந்த பாரியமாற்றம் எதிர்கால அரசியலில் எவ்வாறான மாற்றங்களைகொண்டு வரும் என்பது அனைவரினது எதிர்பார்ப்பாகஉள்ளது.இன,மத,கட்சி ,பேதங்கள் இன்றி நாட்டின்எதிர்காலத்திற்காக போராடினால் நிச்சயம் வெற்றி இருக்கும்என்பதை இந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் உணர்த்தும்பாடமாக உள்ளது. மக்களின் ஒரே கோரிக்கை அவர்களுடைய அன்றாடவாழ்க்கையின் நிம்மதி இந்த நாட்டில் நிலைநாட்டப்படவேண்டும் என.அதற்காகவே அவர்கள் தொடர்ந்துபோராடுகிறார்கள்.

எனவே எதிர்க்கட்சி பலமாக மாறும் போதுதோல்வியடைந்துள்ள இந்த மொட்டு அரசை வீழ்த்தி நாட்டைகட்டியெழுப்ப முடியும்.எது எவ்வாறு இருந்தாலும்.நாட்டின்ஆட்சியை மக்களே இன்று தீர்மானித்துள்ளனர்.




அழகிய இலங்கை அரசியலால் அழுக்காவது ஏன்? Reviewed by Author on July 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.