சாரதியின் கவனக்குறைவால் பேருந்திலிருந்து விழுந்த மாணவி!
எனினும் மாணவி ஏறுவதற்கு முன்னர் பேருந்தை வேகமாக எடுத்ததனால் மாணவி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மாணவி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து பேருந்தினை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்ற நிலையில் சிறுமியின் சகோதரர் உட்பட சிலர் பேருந்தை வழி மறித்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரம் பொலிசார் விபத்தை ஏற்படுத்திய பேருந்தினையும் விபத்தை ஏற்படுத்திய சாரதியையும் உடனடியாகவே விடுவித்துள்ளதுடன் விபத்தை மூடி மறைக்கும் விதத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்திருப்பதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாரதியின் கவனக்குறைவால் பேருந்திலிருந்து விழுந்த மாணவி!
Reviewed by Author
on
August 08, 2022
Rating:

No comments:
Post a Comment