அண்மைய செய்திகள்

recent
-

15 நாட்களாக காணாமல் போன மீனவர்கள் மீட்பு!

கடந்த 15 நாட்களாக மீன்பிடிக்க சென்று திசைமாறி காணாமல் போனதாக கூறப்பட்ட 4 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் அவர்களை மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் கல்முனையில் இருந்து கடந்த 26 செப்டம்பர் மாதம் ஆழ்கடல் மீன் பிடிக்கு சென்ற 4 மீனவர்கள் 15 நாட்கள் கடந்தும் இன்னும் வீடு திரும்பவில்லை என்ற விடயம் தொடர்பாக எமது ஊடகவியலாளர் பாறுக் ஷிஹானிடம் இன்று கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். 

 காணாமல் போண மீனவர்கள் அனைவரும் தற்போது மீட்கப்பட்டு சொந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இருந்து கடந்த 26.09.2022 அன்று மாலை புறப்பட்டு சென்ற 4 மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.இதில் கல்முனையை சேர்ந்த எம்.ஐ.எம் மஜிட் (வயது 55), சி.எஸ்.எச்.எம் நிப்றாஸ் (வயது 36 ), ஏ.பி. கபீர் (வயது 50), எம்.என். ஹில்மி (வயது 33) ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்து காணாமல் போய் இருந்தனர். அவர்கள் சென்ற படகின் ஜிபிஸ் தொழிநுட்ப கருவி பழுதடைந்தமையினால் திசை மாறி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 இவ்வாறு திசை மாறி தத்தளித்த குறித்த படகினை ஒரு மீனவர் கண்டு கடற்படையினருக்கு அறிவித்துள்ளார். இதற்கமைய மீட்பு நடவடிக்கை உள்ளுர் மீனவரின் ஒத்துழைப்புடன் கரைக்கு காணாமல் சென்ற 4 மீனவர்கள் உள்ளிட்ட படகு வாழைச்சேனை துறைமுகத்திற்கு இழுத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனையின் பின்னர் வீடுகளுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்மீட்பு நடவடிக்கையின் போது கடற்படை மீன்பிடி திணைக்களம் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் படகுகள் சங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

15 நாட்களாக காணாமல் போன மீனவர்கள் மீட்பு! Reviewed by Author on October 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.