அண்மைய செய்திகள்

recent
-

கால்பந்து உலகக்கிண்ணம்: சவுதி அரேபியாவிடம் ஆர்ஜெண்டீனா அதிர்ச்சி தோல்வி!

கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டியில் சம்பியன் அணியான ஆர்ஜெண்டீனா அணி, சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. லுசைல் விளையாட்டரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஆர்ஜெண்டீனா அணியும் சவுதி அரேபியா அணியும் மோதின. 

 இப்போட்டியில், சவுதி அரேபியா அணி அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது. இதில் சவுதி அரேபியா அணி சார்பில், சலே அல்ஷெஹ்ரி 48ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், சலீம் அல்டவ்சாரி போட்டியின் 53ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர். ஆர்ஜெண்டீனா அணி சார்பில், அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி போட்டியின் 10ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் குழு சி பிரிவில் 3 புள்ளிகளுடன் சவுதி அரேபியா முதலிடத்தை பெற்றுள்ளது.


கால்பந்து உலகக்கிண்ணம்: சவுதி அரேபியாவிடம் ஆர்ஜெண்டீனா அதிர்ச்சி தோல்வி! Reviewed by Author on November 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.