அண்மைய செய்திகள்

recent
-

நாளை முதல் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்படுகிறது

பெரும் போக நெற் செய்கையில் ஈடுபடவுள்ள விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் நாளை முதல் விடுவிக்கப்படவுள்ளது. கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அலுவலகங்கள் ஊடாக உரங்கள் வெளியிடப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 22,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தின் மற்றுமொரு இறக்குமதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. உலக வங்கியின் நிதியுதவி மூலம் மலேசியாவில் இருந்து உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த உர தொகுதியினை பார்வையிட்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களிடம் போதியளவு யூரியா உரம் கையிருப்பு உள்ளதாகவும், அவற்றை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இரண்டு உர நிறுவனங்களின் கிடங்குகள் தற்போது முழு கொள்ளளவைக் கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். அதன்படி, உர இருப்பு விநியோகம் நாளை ஆகிரம்பமாகிறது. 2022/23 பெரும் போகத்தில் நெல் மற்றும் மக்காச்சோள செய்கைக்கு தேவையான யூரியா உர இருப்புகளை கொள்வனவு செய்வதற்கு 105 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. பெரும் போகத்திற்காக 120,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


நாளை முதல் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்படுகிறது Reviewed by Author on November 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.