மன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வர்த்தகரை விடுவித்த மன்னார் பொலிஸார்
இதன் போது குறித்த காணியில் இருந்து 4 கிராம் 54 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்டுள்ளனர்.
பின்னர் விசாரணைகளை முன்னெடுத்த விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரையும்,மீட்கப்பட்ட ஐஸ் போதைப் பொருளையும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
-எனினும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த போதைப்பொருள் வர்த்தகரை சான்றுப் பொருளான ஐஸ் போதைப்பொருளுடன் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தாது விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டு,மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்கப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகி உள்ள நிலையில்,ஐஸ் போதைப்பொருளுடன் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட போதும் குறித்த நபரை மன்னார் பொலிஸார் விடுதலை செய்துள்ளதாக குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வர்த்தகரை விடுவித்த மன்னார் பொலிஸார்
Reviewed by Author
on
January 30, 2023
Rating:

No comments:
Post a Comment