அண்மைய செய்திகள்

recent
-

நானுஓயா ரதெல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான நட்டஈட்டை உடனடியாக வழங்க குழு நியமனம்


நானுஓயா ரதெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு உடனடியாக நட்டஈடு வழங்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரம் வழங்கியுள்ளதாக வெகுஜன ஊடக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தேர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவர்கள் உட்பட பல குழுக்களுடன் பேசியதாகவும், முடிந்தவரை விரைவாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

 பேருந்தில் ஏறக்கூடிய அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நிர்ணயித்துள்ளதாகவும், இதன் விளைவாக, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்ப்பதற்கான திட்டங்களை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. வீதி பாதுகாப்பு நிறுவகத்தின் தலைவரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் நிஷங்க இந்தக் குழுவிற்குப் பொறுப்பேற்றுள்ளதாகவும், ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குழுவின் ஏனைய உறுப்பினர்களாக மோட்டார் வாகன திணைக்களத்தின் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) டி.குசலனி டி சில்வா, ஸ்ரீயானி ஹேவகே, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் எச்.ஆர்.பசிந்து, கல்வி அமைச்சின் பாடசாலை விவகார பிரதிப் பணிப்பாளர் இந்திக ஹபுகொட மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஷெரீன் அத்துகோரல ஆகியோர் அடங்குவர்.

நானுஓயா ரதெல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான நட்டஈட்டை உடனடியாக வழங்க குழு நியமனம் Reviewed by Author on January 26, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.