மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மீட்பு.
இதன் போது குறித்த பேருந்தின் பின் ஆசனத்திற்கு முன் பகுதியில் உள்ள ஆசனத்தின் கீழே காணப்பட்ட இரும்பு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்ட பொதி ஒன்றை எடுத்து சோதனை செய்தனர்.
-இதன் போது குறித்த பொதியில் கேரள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 380 கிராம் கேரள கஞ்சா இவ்வாறு குறித்த பொதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.குறித்த பேருந்தின் பின் இருக்கையில் இருந்த 4 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மீட்பு.
Reviewed by Author
on
January 30, 2023
Rating:

No comments:
Post a Comment