பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் போராட்டம்
மேலதிக நேர கொடுப்பனவை வரையறை இன்றி வழங்கு,அதிகரித்த மின் கட்டணத்தை நீக்கு,சிற்றூழியர்களை அடக்கி ஆழாதே,அரசே அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கு,நியாயமற்ற வரிக்கொள்கையை நீக்கு போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அதே நேரம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து தராது விட்டல் விரைவில் அனைத்து ஊழியர்களும் இணைந்து சுகயீன போராட்டம் ஒன்றை முன்னெடுக்க போவதாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் போராட்டம்
Reviewed by Author
on
February 23, 2023
Rating:

No comments:
Post a Comment