வவுனியாவில் மருமகனின் தாக்குதலில் மாமியார் பலி ; மனைவி படுகாயம்
அது முற்றிய நிலையில் வீட்டிலிருந்த கோடரி மற்றும் கத்தியைக் கொண்டு கணவன் மனைவி மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.
இதனை தடுக்கச் சென்ற மனைவியின் தாயார் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த மனைவியின் தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த மனைவி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை முன்னெடுத்த நபரை அயலவர்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக உலுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் மருமகனின் தாக்குதலில் மாமியார் பலி ; மனைவி படுகாயம்
Reviewed by Author
on
March 03, 2023
Rating:

No comments:
Post a Comment