அண்மைய செய்திகள்

recent
-

பூநகரி பிரதேச செயலாளரின் முறைகேடுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி பிரதேச செயலாளராக  கடமையாற்றி வருகின்றார் .குறித்த பிரதேச செயலாளரால் பலமுறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை அவதானிக்கமுடிகின்றது. முழங்காவில் பஸ்நிலையத்திற்கு தெற்கு புறமாக உள்ள காணியானது பிரதேச செயலாளரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசகாணியாகும். இக்காணியை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதேச சபை தவிசாளரினால் தனக்கு வேண்டியவர்களுக்கு வழங்கநடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் பொதுமக்கள் முறையிட்ட பொழுதும் இன்று வரை எந்தவொரு நடவடிக்கையும் பிரதேச செயலாளரால் எடுக்கப்படவில்லை. பிரதேச செயலாளரின் இந்த நடவடிக்கையால் கோபமடைந்த மக்கள் இக்காணி தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தில் தகவல் கோரியிருந்தார்கள்.

இருப்பினும் பிரதேச செயலாளர் 14 நாட்களுக்குள் தகவலை வழங்காது.காணி வழங்கிய ஊழலை மறைக்கும் பொருட்டு தகவல் வழங்கும் கால எல்லையை 07.03.2023 வரை நீடித்திருந்ததோடு இன்றுவரை குறித்த தகவலை வழங்கவில்லை. மேலும் முழங்காவில் வைத்தியசாலை வீதியில் ஞானசேகரன் தர்மேந்திரா என்பவருக்கு சொந்தமான காணியானது பூநகரி பிரதேச சபை தவிசாளரினால்  அத்துமீறி பிடிக்கப்பட்டு கட்டுப்பாட்டில் உள்ளது இக்காணி தொடர்பில் மக்கள் பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்த பொழுதும் பிரதேச செயலாளர் இன்றுவரை வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதோடு இப்பிரச்சினை தொடர்பில் பொதுமகன் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தில் தகவல் கோரியிருந்த பொழுதும் தகவல் அறியும் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய தகவலை வழங்காது செயற்படுகின்றார் பிரதேச செயலாளர். மேலும் பொன்னவெளி கிராம அலுவலர் பிரிவில் Tokyo சீமேந்து நிறுவனத்தால் சீமேந்து ஆலை ஒன்று ஆரம்பிக்க இருந்தநிலையில் இச்சீமேந்து ஆலை திட்டமானது மக்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கைவிடப்பட்டது. 

மேலும் இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்த குறித்த நிறுவனம் முயற்சி செய்கின்றது. இந்நிறுவனத்திற்கும் கிராம மட்ட அமைப்புகளுக்கும் இடையே பேரம் பேசப்படுகின்றது.இப்பேரம் பேசலுக்கு இடைக்தரகராக நிமால் என்பவர் செயற்படுகின்றார். பேரம் பேசும் பொழுது நிமால் கருத்து தெரிவிக்கையில் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் tokyo நிறுவதனத்திற்கு ஆதவாக செயற்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனவே பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோரின் ஆசிர்வாதத்துடன் குறித்த சீமேந்து ஆலை அமைக்கப்படுமாயின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பல பகுதிகள் உவர் நிலமாக மாறும் சந்தர்ப்பங்கள் உள்ளது.


பூநகரி பிரதேச செயலாளரின் முறைகேடுகள் Reviewed by Author on March 08, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.