அண்மைய செய்திகள்

recent
-

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரநடுகை திட்டம் முன்னெடுப்பு

 உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (ஜுன் 05 ) இயற்கையின் சுவாசத்தை வளர்ப்பதற்கான ஒரு பெருநிறுவன சமூகப்பொறுப்பு தொனிப்பொருளில் 10 ஆயிரம்  மரங்களை நடுதல் தொனிப்பொருளில் சியபதவிலிருந்து தாய் நிலத்திற்கு எனும் சம்பத் வங்கியின் நிதி நிறுவனமான சியபத நிறுவனத்தின் ஏற்பாட்டில் பல்வேறு நிறுவனங்களில் மர நடுகை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.


இன்று அம்பாறை மாவட்ட கல்முனை பகுதியில் அமைந்துள்ள 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவில் மரநடுகையின் ஆரம்ப கட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது கல்முனை இராணுவ முகாமின் இரண்டாவது நிர்வாக  கட்டளை அதிகாரி மேஜர் தயானந்த மற்றும் சியபத நிதி நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிராந்திய முகாமையாளர் முஹம்மட் பிரிம்சாத் அந்நிறுவனத்தின் கல்முனை கிளை முகாமையாளர் முஹம்மட் பாயிஸ் அதன் ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் அதன் தொடர்ச்சியாக அருகில் உள்ள கல்முனையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்நா நௌ தீகாயு கடற்படை முகாமில் இத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.இதன் போது குறித்த முகாமின் கட்டளையிடும்  அதிகாரி பி.இ.எம்.டி தம்மிக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை  சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியும், உதவிக்கல்வி பணிப்பாளருமான என்.எம்.எம் மலீக் தலைமையில் சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலயத்திலும்  மர நடுகை திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதன் போது சாய்ந்தமருது கல்வி கோட்டத்தை சேர்ந்த 10 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு பெறுமதி வாய்ந்த  மரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. பின்னர் குறித்த பாடசாலை வளாககத்திலும் மரநடுகை முன்னெடுக்கப்பட்டன.

இந்த மர நடுகை திட்டத்தில் தென்னை, மாமரம், தோடை, மாதுளை ,ஜம்பு ,முந்திரிகை, உள்ளிட்ட   மரங்கள் உள்வாங்கப்பட்டு நடப்பட்டதுடன் அதிகமான இராணுவத்தினர், கடற்படையினர், அதிபர்கள், ஆசிரியர்கள் , ஆர்வத்துடன் பங்கேற்று இருந்தனர். எதிர்காலத்தில் சூழலை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ்  பொது இடங்கள்  கடற்கரைப் பிரதேசங்கள்  அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள்  மத ஸ்தாபனங்கள், வயல் காணிகள் உள்ளிட்ட சகல இடங்களிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் இத்திட்டம் சியபத  நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட உள்ளமை  சுட்டிக் காட்டத்தக்கது.






உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரநடுகை திட்டம் முன்னெடுப்பு Reviewed by Author on June 05, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.