அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேட்டையாமுறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள 'கள்' விற்பனை நிலையத்தை இடமாற்ற கோரி மக்கள் போராட்டம்.

 மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேட்டையா முறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள 'கள்' விற்பனை நிலையத்தை இடமாற்ற கோரி மக்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.


குறித்த பகுதியில் உள்ள கள்  விற்பனை நிலையத்தை அகற்றி வேறு ஒரு இடத்தில் அமைக்குமாறும் இதனால்   பாரிய பிரச்சினை ஏற்படுவதாகவும், குடும்பங்களுக்குள் பிரச்சனைகள், சமூக சீர்கேடு, சிறுவர்கள் மது போதைக்கு அடிமையாகுவதாகவும் இதை கருத்தில்  கொண்டு உரிய அதிகாரிகள் விற்பனை நிலையத்தை இப்பிரதேசத்தில் இருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம்  செய்யக் கோரி குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதே வேளை கள் விற்பனை நிலையத்தை மையமாக வைத்து குறித்த பகுதியில்  வேறு போதைப் பொருள் வியாபார நடவடிக்கை மேற் கொள்ள படுவதாகவும் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்து காணப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த அடம்பன் போலீசார் உடனடியாக அடம்பன் பனை தென்னை வள அபிவிருத்தி  கூட்டுறவு சங்க முகாமையாளரை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வருகை தருமாறு கூறியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முகாமையாளர் மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்ததோடு,மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து , இன்று ஞாயிற்றுக்கிழமை (11) முதல் கள் விற்பனை நிலையம் மூடுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த கள் விற்பனை நிலையம் மூடப்படுவதனால் இத்தொழிலை நம்பி வாழ்வாதாரமாகக் கொண்டு இயங்கும் சுமார் 10 இற்கும்  மேற்பட்ட கள்ளு சீவும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்று முழுதாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் கள்ளு விற்பனைக்கு அல்லது கள்ளு சீவும் தொழிலாளர்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட இல்லை எனவும்,குறித்த பகுதியில் உள்ள கள்ளு விற்பனை நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி தாம் போராட்டத்தை முன்னெடுத்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.









மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேட்டையாமுறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள 'கள்' விற்பனை நிலையத்தை இடமாற்ற கோரி மக்கள் போராட்டம். Reviewed by Author on June 11, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.