அண்மைய செய்திகள்

recent
-

ஒரு வருட காலப்பகுதிக்குள் இரண்டு முறை ஊடகவியலாளரிடம் திருட்டு

 


கொழும்பில் உள்ள தனது அலுவலகத்திற்குள் நுழைந்து கமரா மற்றும் ஊடக உபகரணங்களை இனந்தெரியாத ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்னரும் இதேபோன்று திருட்டு இடம்பெற்றபோதிலும் பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஓகஸ்ட் 14 ஆம் திகதி இரவு, கொட்டாஞ்சேனை, பிக்கரிங்ஸ் வீதியில் உள்ள தனது aivarree.com என்ற இணையதளத்தை நடத்தும் அலுவலகத்திற்குள் ஒருவர் நுழைந்து இந்தத் திருட்டைச் செய்ததாகவும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் சுயாதீன ஊடகவியலாளர் பரமேஸ்வரன் விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் தனது இணையதளம் மற்றும் யூடியூப் தளங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக தனது ஊடகப் பணியை இலக்கு வைத்து யாரோ இந்தத் திருட்டைத் திட்டமிட்டுள்ளதாக ஊடகவியலாளர் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றார்.

ஜூன் 21, 2022 அன்று, யாரோ ஒருவர் ஊடகப் பணிக்காகப் பயன்படுத்தப்படும் அப்பிள் ரக மடிக்கணனி உட்பட 20 இலட்சம் பெறுமதியான உபகரணங்களை கொட்டாஞ்சேனையில் உள்ள தான் வசிக்கும் வீட்டில் இருந்து திருடி சென்றதாக, கொட்டாஞ்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்த போதிலும், இதுவரை எவரையும் கைது செய்ய பொலிஸாரால் முடியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தனது இணையதளம் இரண்டு தடவைகள் “ஹெக்“  செய்யப்பட்டதாகக் கூறும் சுயாதீன ஊடகவியலாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன், தான் நடத்தும் இரண்டு யூடியூப் தளங்களும் ஹெக் செய்யப்பட்டதாகவும் ஒரு யூடியூப் தளம் முழுமையாக அழிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.




ஒரு வருட காலப்பகுதிக்குள் இரண்டு முறை ஊடகவியலாளரிடம் திருட்டு Reviewed by Author on August 17, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.