துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 44 பேர் பலி!
இந்த வருடத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவற்றில் பெரும்பாலானவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பழிவாங்கும் கொலைகள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 44 பேர் பலி!
Reviewed by Author
on
September 22, 2023
Rating:

No comments:
Post a Comment