இராணுவத்தினரிடம் இருந்து மீண்டும் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்ட பெட்டிகலோ கெம்பஸ்
பல வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு ஜெயந்தியாயவில் அமைந்துள்ள “பெட்டிகலோ கெம்பஸ்” விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய பல்கலைக்கழகத்திலிருந்து இராணுவத்தினர் இன்று (20 ) வெளியேறியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (19 ) முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் கெம்பஸை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று நேரடியாக கெம்பஸுக்கு விஜயம் செய்து கெம்பஸை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கெம்பஸை பொறுப்பேக்கும் நிகழ்வில் கல்குடா அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.ஹாரூன் ஸஹ்வி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம். தாஹீர், மௌலவி மும்தாஸ் மதனி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு பல்கலைக்கழகம் சகல இன மக்களுக்குமானது.அதன் கல்வி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார் .
இராணுவத்தினரிடம் இருந்து மீண்டும் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்ட பெட்டிகலோ கெம்பஸ்
Reviewed by Author
on
September 21, 2023
Rating:

No comments:
Post a Comment