அண்மைய செய்திகள்

recent
-

மலையகம் 200 கண்காட்சியினை கல்முனையில் 2023 நவம்பர 02ம், 03ம் திகதிகளில் நடத்த தீர்மானம்

 மக்களின் வாழ்க்கை வரலாற்றினை பிரதிபலி நிகழ்வாக அமையவுள்ளன. இந் நிகழ்வுக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்தின மக்களும் தவறாது கலந்து கொண்டு அவர்களின் வாழ்வியல் வரலாற்று விடயங்களை அறிந்து தங்களது ஆதரவினையும், ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு வேண்டுகின்றோம்.


 இது தவிர மலையக மக்களின் பொருளாதார வாழ்வியல் விடயங்கள் கூட தற்போது ஆராயப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

மலையகத்தில் தோட்டங்களில் பெண்களே அதிகமாக தொழில் செய்கின்றார்கள். இவர்கள் பால் நிலை சார்ந்த பல பிரச்சினைகளையும் சொல்ல முடியாத துயரங்களையும் அனுபவிக்கின்றனர். இவர்களின் பிரச்சினைகள் ஏனையவர்களைப் போல் அதிகமாகப் பேசப்படுவதில்லை இவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இப் பெண்களின் உழைப்பு தொழில் சங்கங்களினாலும், கம்பனிகளினாலும் சுரண்டப்படுவதுடன் பெண் என்பதால் உழைப்பிற்கான ஊதியம் பாராபட்சமாகவே வழங்கப்படுகின்றது. இந்த ஊதியம் பாராபட்சம் இன்றி சமமாக வழங்கப் பட வேண்டும்

இவர்களின் வறுமை நிலை காரணமாக வாழ்கை முறையானது பின் தஙங்கிய நிலைக்கு தள்ளப்படுள்ளது. Eg: பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகளை இடை நிறுத்தி விட்டு நகர்புரங்களுக்கு வீட்டு வேலைக்காக அனுப்புகின்றார்கள் அங்கு பல்வேறு வகையான துஸ்பிரயோகங்களுக்கும். வன்முறைகளுக்கும் ஆளாக்கப்படுவதுடன் சடலங்களாகவும் மீட்கப்படும் சம்பவங்களும் கடந்த காலங்களில் அதிகம் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு பாதிக்கப்படும் பிள்ளைகளின் பாதிப்புகள் தொடர்பாக முறையான விசாரஜைகள். நடாத்தப்பட்டு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். சிறுவர் தொழில் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும், தோட்டப் பகுதிகளிலுள் லயம் வாழ்கை முறைானது பல்வேறுபட்ட பிரச்சினைகளையும், வன்முறைகளையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்திவருகின்றது 

இது மாற்றியமைக்கப்பட வேண்டும். இம் மக்களின் அடக்குமுறை வாழ்க்கை மாற்றப்பட்டு அரசாங்கம் தனி தனியான காணிகளையும், வீடுகளையும் வழங்க வேண்டும். இதுவே அம்மக்களின் அடிப்டை தேவையாகவும் உள்ளது. அதே போன்று அவர்களுக்கான சுகாதார, மருத்துவ சேவைகளும், கல்வி அபிவிருத்திகளும் முறையாக கிடைப்பதற்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுப்பது மிக மிக அவசியமாகும். போதிய சுகாதார வைத்திய வசதிகள் இல்லாத காரணத்தால் சுப்பினி தாய்மார்கள், நோயாழிகள் உயிர் இழப்புக்களையும் எதிர்கொள்கின்றனர். எனவே இம் மக்களின் சமூக பொருளாதார, கலாச்சார உரிமைகள், அடிப்படை வசதிகள் மற்றும் மனித உரிமைகலும் உறுதிப்படுத்தப்பட்ட வேண்டும். அதற்காக நாம் சிவில் அமைப்புகள் என்றதன் அடிப்படையில் கூட்டக இணைந்து கிழக்கு மாகாணத்திலிருந்து எம்மால் முடியுமான அழுத்தங்களையும், ஆதரவினையும் வழங்க திட்டமிட்டுள்ளோம் என குறிப்பிட்டனர்.












மலையகம் 200 கண்காட்சியினை கல்முனையில் 2023 நவம்பர 02ம், 03ம் திகதிகளில் நடத்த தீர்மானம் Reviewed by Author on October 31, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.