அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவுக்கு வியட்னாம் போன்று இஸ்ரேலிய படைகளுக்குகாசா அமையுமா ? இந்திய படைகளுக்கு புலிகளின் நித்திகைக்குளம் ஓர் வரலாறு.

 அமெரிக்காவுக்கு வியட்னாம் போன்று இஸ்ரேலிய படைகளுக்கு காசா அமையுமா ? இந்திய படைகளுக்கு புலிகளின் நித்திகைக்குளம்  ஒப்ரேசன் ஜெக் மேட் ஓர் வரலாறு.     

மரபுப் போர்மூலம் எதிரி படைகளை முற்றாக அழித்துவிட்டு வெற்றிபெற முடியும், ஆனால் கெரில்லா போராளிகளை முற்றாக அழித்து வெற்றிபெற முடியாது. இங்கே காசாவில் ஹமாஸ் அமைப்பினர் இருமுறையினையும் பின்பற்றுவதனால் யூத ஆக்கரமிப்பாளர்கள் கூறுவதுபோன்று ஹமாஸை முற்றாக அழிப்பது இலகுவான காரியமல்ல.   

அமெரிக்காவுக்கு பலத்த அவமானத்தையும், தோல்வியையும், தலைகுனிவையும் ஏற்படுத்திய வியட்னாம் போரானது 1964 தொடக்கம் 1975 வரைக்கும் நீடித்தது. இதில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான படைபலத்துடனும், நவீன பேரழிவு ஆயுதங்களுடனும் போர்புரிந்து சுமார் 60,000 (அறுபது ஆயிரம்) வரையிலான படையினரை போரில் இழந்ததன் பின்புதான் அமெரிக்க படைகள் வியட்னாமைவிட்டு வெளியேறினர்.  

இத்தனைக்கும் ஹோசிமின் தலைமையிலான “வியட்மின்” அமைப்பின் “வியட்கொங்’ போராளிகளின் மன வலிமைக்கும், கெரில்லா போர்முறைக்கும் எதிராக அமெரிக்க படைகளின் நவீன ஆயுதங்களினாலும், படை பலத்தினாலும் ஈடுகொடுக்க முடியவில்லை.  

வியட்கொங் கெரில்லா போராளிகளின் போர் வியூகங்களும், தியாகங்களும் அதற்காக அவர்கள் உருவாக்கிக்கொண்ட சுரங்கப்பாதைகள், புதர்கள், அடர்ந்த காடுகள் என்பன கெரில்லா போராளிகளின் போரிடும் திறனுக்கு அரணாக விளங்கியது.  

அத்துடன் பொதுமக்கள் மற்றும் போராளிகள் அடங்கலாக சுமார் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்களின் உயிர் தியாகத்திலே இந்த போரினை வியட்நாமியர்கள் வெற்றிகொண்டனர்.

அமெரிக்காவுக்கு எதிராக போரிட்ட வியட்கொங் போராளிகளுக்கு இறுதி வரைக்கும் சோவியத் யூனியன், சீனா ஆகிய நாடுகள் ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கியது.  

எமது நாட்டில் விடுதலை புலிகளுக்கு எதிராக இந்திய படையினர் போர் செய்தபோது அதிகமாக கெரில்லா தாக்குதல்களை விடுதலை புலிகள் மேற்கொண்டனர். அதில் “நித்திகைக்குளம்” முற்றுகை மிகப்பிரபலமானது.  

அந்தவகையில் புலிகளின் தலைவர் உற்பட முக்கிய தளபதிகள் அடங்கலாக இந்திய படையினரின் “நித்திகைக்குளம்” முற்றுகைக்குள் அகப்பட்டபோது நிலக்கீழ் சுரங்கங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் வழியாகவே நகர்ந்துசென்று அடர்ந்த காட்டினுள் தப்பித்ததாக கூறப்படுகின்றது.

விடுதலை புலிகள் தொடர்ந்து கெரில்லா போர்முறையினை பின்பற்றியிருந்தால் இறுதி யுத்தத்தில் புலிகளை முற்றாக தோல்வியடைய செய்திருக்க முடியாது. இன்னமும் போர் இருந்திருக்கும்.   

தற்போது காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மரபு மற்றும் கெரில்லா ஆகிய இரண்டு போர்முறைகளையும் பின்பற்றுகின்றனர். அதாவது வியட்னாமில் இருந்த களநிலவரம் போன்றதொரு நிலை இன்று காசாவில் காணப்படுகின்றது. காசாவில் உள்ள நிலக்கீழ் சுரங்கமானது வியட்நாமில் “வியட்கொங்’ போராளிகள் அமெரிக்க படைகளை எதிர்கொள்ள அமைத்த சுரங்கங்களைவிட ஆழமானதாகவும் மிகப் பிரமாண்டமானதாகவும் உள்ளதாக அறியமுடிகிறது.

அதாவது காசாவில் யூதப் படைகளினால் குறிப்பிட்ட சுரங்கப்பாதை அழிக்கப்பட்டால் அதனால் ஏனைய சுரங்கப் பாதைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் சிலந்தி வலைப்பின்னல் போன்று பல நூறு கிலோமீட்டரில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

விமானப் படைகளின் உதவியின்றி இஸ்ரேலிய படைகளினால் தரை நகர்வினை மேற்கொள்ள முடியாது. அவ்வாறு மேற்கொள்கின்ற படை நடவடிக்கையினால் பொதுமக்களின் குடியிருப்புக்களில் சேதங்களை ஏற்படுத்த முடியுமே தவிர, ஹமாஸ் இயக்கத்தினை முற்றாக அழித்துவிட முடியாது.

வியட்நாமில் அமெரிக்க படைகளுக்கு காத்திருந்த பொறிகளை விட பாரிய பொறிமுறைகள் காசாவில் யூதப்படைகளுக்காக காத்திருக்கின்றது. அத்துடன் காசாவில் அப்பாவி உயிர்கள் சிந்துகின்ற ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பெறுமதி உள்ளது.

தங்கள் நிலங்களை பாதுகாப்பதற்காக அன்று வியட்நாமியர்கள் உயிர்களை தியாகம் செய்ததன் காரணமாகவே அவர்கள் இன்று கௌரவமான சுதந்திர காற்றினை சுவாசிக்கின்றனர். அதுபோலவே இன்று காசாவில் மக்கள் சிந்துகின்ற ஒவ்வொரு துளி இரத்தமும் எதிர்காலங்களில் அவர்களது நாட்டினையும், கௌரவத்தினையும் பாதுகாக்கும்.



அமெரிக்காவுக்கு வியட்னாம் போன்று இஸ்ரேலிய படைகளுக்குகாசா அமையுமா ? இந்திய படைகளுக்கு புலிகளின் நித்திகைக்குளம் ஓர் வரலாறு. Reviewed by Author on October 29, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.