அண்மைய செய்திகள்

recent
-

தேசிய வாசிப்பு மாதம் மற்றும் நூலக வாரத்தில் நடமாடும் நூலகம் திறந்து வைப்பு

 அரச சுற்று நிருபத்திற்கு அமைய 

நூலக வாரத்தினை முன்னிட்டு
தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் 2023 "நினைத்த இடத்திற்கு செல்லவும் வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தை எடுக்கவும்" எனும் தொனிப்பொருளில்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யின் நூலக பொறுப்பாளர் ஏ.எல். நளீம் தலைமையில் பச்சை வீடு ௯டத்தில் மிக சிறப்பான நெறிப்படுத்தலில் நடை பெற்ற நடமாடும் நூலகத்திறப்பு நிகழ்வில் கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

நடமாடும் நூலகத்தில் சமயம், அகராதிகள், நாவல், கல்வி, அறிஞர்கள், பாடப் புத்தகத்துடன் தொடர்பான நூல்கள், செய்தி பத்திரிகைகள், கவிதைகள், சஞ்சிகைகள் என பல் துறைசார்ந்த நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இடைவேளை நேரத்தில் கல்லூரி சமூகத்தினர் பயன்பெறும் வகையிலும் வாசிப்பினை மாணவி மத்தியில் சமூக மயப்படுத்துவற்கான ஏற்பாடுகள், ஆலோசனைகள், வழிகாட்டல்களினை கல்லூரியின் நூலக பொறுப்பாளர் ஏ.எல். நளீம் அவர்களினால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) உதவி அதிபர்களான ஏ.எச் நதிரா, எம்.எஸ் மனூனா, என்.டி நதீகா, ஆசிரியர்கள், நூலக உத்தியோகத்தர்கள், நூலக சங்கத்தின் மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.







தேசிய வாசிப்பு மாதம் மற்றும் நூலக வாரத்தில் நடமாடும் நூலகம் திறந்து வைப்பு Reviewed by Author on November 03, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.