அண்மைய செய்திகள்

recent
-

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமான மாவீரர் வார நிகழ்வு

 தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்ரிக்கப்படவுள்ளது


நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்ரிக்கப்படுவது வழமை 

அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது

அந்தவகையில் கார்த்திகை மாதம் 21 ம் திகதி முதல் 27 ம் திகதி வரை மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்படுவது வழமை அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது 

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள்  இன்று (21) உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது

உயிர்த்தியாகம் செய்த  மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி  அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் செலுத்தி மாவீரர்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கப்பட்டனர்

இவ்வாண்டும் கார்த்திகை 27 மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக இடம்பெறும் எனவும் அனைத்து மாவீரர் பெற்றோர் உறவுகளையும்  கலந்துகொள்ளுமாறும் முன்னாயத்த பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்

அத்தோடு 2009 ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தபோது இந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்த கல்லறைகள் நினைவுக் கற்கள் மற்றும் வளாகம் முற்றாக இராணுவத்தினரால் சேதமாக்கப்பட்டிருந்தது 

இந்நிலையில் குறித்த துயிலும் இல்லம் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வருவதோடு இவ்வாண்டும் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற  ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது

இந்நிலையில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டு பிரமாண்டமான நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமான மாவீரர் வார நிகழ்வு Reviewed by Author on November 21, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.