அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 14 வருடங்களுக்குப் பின்னர் இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை- மன்னார் மேல் நீதிமன்றத்தால் தீர்ப்பு.

 மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில்  கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன்,ஒருவர் காயமடைந்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்டு மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைகளின் இடம் பெற்று வந்த நிலையில் குறித்த குறித்த குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய்க்கு 14 வருடங்களின் பின்னர் மன்னார் மேல் நீதிமன்றம் இன்று (6) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.


மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் 02-அக்டோபர்-2009  (02/10/2009)  அன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இராணுவ சேவையில் இருந்த போது இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு ஒருவர் படுகாயமடைந்தார்.

குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து மன்னார் மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்தது.

 முருங்கன் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தீர்ப்புக்காக  இன்றைய தினம்  (6) மன்னார் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.எம்.மிகால் முன்னிலையில்   எடுத்துக் கொள்ளப்பட்டது.

 இதன் போது இரண்டு மனிதப் படுகொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்ட நிலையில் மேல் நீதிமன்ற  நீதிபதியால் குறித்த இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இத தீர்ப்பு வழங்கும் போது மேல் நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகள் அணைக்கப்பட்டு நீதிமன்றத்தின் கதவுகள் பூட்டப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்டது.

எழுதப்பட்டதன் பின்னர் எழுதப்பட்ட பேனா நீதிபதியால் உடைக்கப்பட்டது.

இன்றைய தினம் குற்றவாளியை போகம்பரை சிறைச்சாலை க்கு அனுப்பும்படி கட்டளையிடப்பட்டது.







மன்னாரில் 14 வருடங்களுக்குப் பின்னர் இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை- மன்னார் மேல் நீதிமன்றத்தால் தீர்ப்பு. Reviewed by Author on December 06, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.