அண்மைய செய்திகள்

recent
-

கல்முனை சீர்திருத்தப் பாடசாலையில் சிறுவன் மர்மமான மரணம்.

கல்முனை சீர்திருத்த பாடசாலையில் 15 வயது சிறுவன் மர்மமான முறையில் மரணம்.

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கல்முனை சீர்திருத்தப் பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த விடயத்தில் சிறுவனின் தந்தையின் முயற்சியால் அது கொலை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதம் 16ஆம் திகதி கொக்குவில் கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் மணி, விளக்கு, சாம்புராணித் தட்டு போன்றவற்றை திருடியதான குற்றச்சாட்டின் பெயரில் கொக்குவில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சிறுவன், மற்றும் ஒரு பூசாரி ஆகிய இருவரையும் நீதிமன்ற உத்தரவின் பெயரில் 17 ஆம் திகதி கல்முனை சீர்திருத்த பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் பூசாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


குறித்த சிறுவன் புதன்கிழமை (29.112023. அதிகாலை 3.30  மணி அளவில் உயிரிழந்துள்ளதாக சிறுவனின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


 தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தனது மகன் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக மரணமடைந்தவரின் தகப்பனார் சந்தேகப்பட்டதன் அடிப்படையில்

சிறுவனின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் இருந்து அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சட்டவைத்திய அதிகாரியால் உடற்கூற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


குறித்த உடற்கூற்று பரிசோதனையின் அடிப்படையில் சிறுவன் அடித்து கொல்லப்பட்டுது தெரியவந்துள்ளது.


இதன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட கல்முனை பொலிஸார் கல்முனை சீர்திருத்தப் பாடசாலையின் மேற்பார்வையாளரான 28 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.


குறித்த சிறுவன் கிரிக்கட் விக்கட் பொல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தினை விசாரணை செய்து வருவதாகவும் பொலீசார் தெரிவிக்கின்றனர்.


மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்த சிறுவன் தாய் மனநிலை பாதிக்கப்பட்டவராகவும் அம்மம்மாவின் பாதுகாப்பிலே வளர்ந்து வந்துள்ளார் எனவும் அறிய முடிகிறது.


சிறிய ஒரு திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறுவன் நீதிமன்றம் வரை சென்று இறுதியில் மகனின் சடலத்தையே தங்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்ற குடும்பத்திற்கும் இந்த குற்றத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும்.


இந்த நாட்டில் சிறுவர்கள் திருட்டில் ஈடுபடுகின்ற அளவிற்கு நாட்டைத் தள்ளிய ஆட்சியாளர்களும் குற்றவாளிகளே என்பதையும் 15 வயது சிறுவனுக்கு கை விலங்கு போட்டு இவ்வாறு தடுத்து வைக்கவும் விசாரிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளதா என்பதையும்

அந்த சிறுவன் எதனால் திருட்டில் ஈடுபட்டான்  என்பதையும் அறிந்து இனியும் இவ்வாறு சிறுவர்கள் திருட்டில் ஈடுபடாத அளவிற்கும் நாட்டின் சட்டதிட்டங்களை அமைத்து சிறுவர்களின் உரிமையினையும் எதிர்காலத்தையும் காப்பாற்றுங்கள்.



கல்முனை சீர்திருத்தப் பாடசாலையில் சிறுவன் மர்மமான மரணம். Reviewed by Author on December 05, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.