அண்மைய செய்திகள்

recent
-

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க பேச்சுவார்த்தை

 மியன்மாரில் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள இளைஞர்களை மீட்பதற்கு பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக்க பண்டார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் சைபர் குற்ற வலயம் என அடையாளப்படுத்தப்படும் பகுதியில் சிக்கிய இந்த 56 இலங்கை இளைஞர், யுவதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு மியன்மாரின் உள்விவகார அமைச்சர் அனுமதி வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

சைபர் குற்ற வலயத்தில் அடிமை சேவகம்

மியான்மார் மற்றும் தாய்லாந்து எல்லை பகுதியில் இந்த சைபர் கிரிமினல் ஏரியா அல்லது சைபர் குற்ற வலயத்தில் இலங்கையைச் சேர்ந்த 56 இளைஞர், யுவதிகள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வலயம் முழுமையாக பயங்கரவாதிகளினால் கட்டுப்படுத்தப்பட்டு வருவதனால் இளைஞர்களை விடுதலை செய்வதில் பல சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இலங்கையர்களை மீட்பது தொடர்பில் மியன்மார் இராணுவ ஆட்சியின் அதிகாரிகள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க பேச்சுவார்த்தை | Cyber Slaves Srilankan In Myanmar

பெரும் தொகை பணத்திற்கு விற்பனை

இலங்கை மட்டுமின்றி ஆசிய நாடுகள் பலவற்றின் இளைஞர், யுதிகள் இந்த வலயத்தில் அடிமைச் சேவகம் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க பேச்சுவார்த்தை | Cyber Slaves Srilankan In Myanmar

ஏற்கனவே இவ்வாறு சிறைபிடிக்கப்பட்டு இருந்தவர்களை சில நாடுகள் இராணுவ ரீதியான நடவடிக்கைகள் மூலம் மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு காலப்பகுதியில் சுற்றுலா வீசா மூலம் இலங்கை இளைஞர், யுவதிகளை தாய்லாந்துக்கு அழைத்துச் சென்று அவர்களை தீவிரவாதிகளிடம் பெரும் தொகை பணத்திற்கு விற்பனை செய்த நபர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க பேச்சுவார்த்தை Reviewed by வன்னி on December 21, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.