அண்மைய செய்திகள்

recent
-

தேசிய அடையாள அட்டை தொடர்பில் புதிய நடைமுறை : ஜனவரி முதல் மாற்றம்!!

 டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான அடிப்படை விடயங்களை ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.இது தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.









கடந்த வாரம் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

நான்கு பில்லியன் ரூபாய் இந்திய நிதியத்துடன் வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் பயோமெட்ரிக் தகவல்களின் தரவுகள் அடங்கும் என குறிப்பிடப்படுகின்றது.முன்னதாக டிஜிட்டல் அடையாள அட்டை விண்ணப்பிப்பதில் 76 சுயவிபர தரவுகள் கோரப்பட்டிருந்தாலும், புதிய டிஜிட்டல் அட்டை பெற 6 தரவுகள் மட்டுமே தேவை அதற்கமைய, புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, ​​பெயர், முகவரி, பிறந்த திகதி, பாலினம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கட்டாயம் வழங்க வேண்டும்.


விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதன் மூலம், அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டையை முறையாக வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என குறிப்பிடப்படுகின்றது.



தேசிய அடையாள அட்டை தொடர்பில் புதிய நடைமுறை : ஜனவரி முதல் மாற்றம்!! Reviewed by வன்னி on December 20, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.