அண்மைய செய்திகள்

recent
-

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 12 ஆவது சர்வதேச ஆய்வரங்கு!

 

.இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் “Digital Transformation for a Sustainable Future” எனும் தொனிப்பொருளில் 12 ஆவது சர்வதேச ஆய்வரங்குக்கு, IntSym 2024 இணைப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா அவர்களது தலைமையில் 2024.03.01 ஆம் திகதி பல்கலைக்கழக பிரதான கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற நிகழ்வுகளில் ஆரம்ப நிகழ்வாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் அங்கு நிறுவப்பட்டிருந்த வர்த்தக காட்சிக் கூடங்களை திறந்து வைத்தார்.
IntSym 2024 இணைப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா அவர்களது தலைமையுரையுடன் ஆரம்பமான நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் பிரதம அதிதியுரையாற்றினார்.

நிகழ்வின்போது IntSym 2024 பிரதம ஆசிரியர் கலாநிதி எம்.பி.எம். இர்ஷாட் அவர்கள் IntSym 2024 ஆசிரியர் குழாம் மற்றும் ஆய்வரங்குக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் அவற்றை தெரிவு செய்த வழிமுறைகள் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டார். பின்னர் IntSym 2024 Abstracts Book வெளியிட்டு வைக்கும் இடம்பெற்றது.

12 ஆவது சர்வதேச ஆய்வரங்கின் பிரதான பேச்சாளரான பிரித்தானியாவின் Gloucestershire பல்கலைக்கழகத்தின் Head of School of Computing and Engineering பேராசிரியர் Kamal Bechkoum அவர்கள் கலந்துகொண்டு “Digital Transformation for a Sustainable Future” எனும் தொனிப் பொருளில் நீண்டதொரு உரையை ஆற்றினார். பின்னர் உள்ளூர் தொழில் முனைவோர்களான அப்துல் கபூர் முகம்மட் சாமில் மற்றும் நெய்னா முகம்மட் றிஸ்மிர் ஆகியோர் தங்களது தொழில் அனுபவங்கள் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டனர்.

Digital Transformation for a Sustainable Future Industry Dialogues 2024 தொடர்பான குழு விவாதம் ஒன்றும் இடம்பெற்றது. இதற்கு மதிப்பீட்டாளராக தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எச். தௌபிக் அவர்கள் செயற்பட்ட அதேவேளை; குழுவின் பேச்சாளர்களாக பிரித்தானியாவின் Gloucestershire பல்கலைக்கழகத்தின் Head of School of Computing and Engineering பேராசிரியர் Kamal Bechkoum அவர்களும் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டபிள்யு. ஜி.சி. டபிள்யு. குமார அவர்களும், BCAS கேம்பஸின் ஸ்தாபகரும் நிறைவேற்று பணிப்பாளரும் தற்போதைய Chairman/CEO-EduGate International பொறியலாளர் அப்துர்ரஹ்மான் அவர்களும், தமிழ்நாடு அன்னை திரேஷா பெண்கள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி P.B. Beulahbel Bency அவர்களும் கலந்து கொண்டனர்.
முதல் அமர்வின் இறுதி நிகழ்வாக IntSym 2024 உதவி செயலாளர் விரிவுரையாளர் ஏ.ஆர்.எப். தபானி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்வுகளை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம். முகம்மட் ஸிராஜ் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது அமர்வில் IntSym 2024 க்கு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தோர் தங்களது கட்டுரைகளை முன்னிலைப்படுத்தி விவாதித்தனர். குறித்த 12 ஆவது சர்வதேச ஆய்வரங்கின்போது 200 ஆராச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.

இரண்டாவது அமர்வுகள் கலை கலாச்சார பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம், பொறியியல் பீடம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடம், தொழில்நுட்பவியல் பீடம் மற்றும் அஷ்ரப் ஞாபகார்த்த பிரதான நூலகம் போன்றவற்றில் இடம்பெற்றன.

நிகழ்வுகளில் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர், பதில் நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி, நூலகர் எம்.எம். றிபாஉடீன், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள், உள்ளூர் தொழில் முனைவோர், நிறைவேற்று உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 12 ஆவது சர்வதேச ஆய்வரங்கு! Reviewed by Author on March 02, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.