அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிற்றூழியர்களின் பணிபுறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி!

 சம்பள உயர்வை  வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்



அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த 180 வரையான சிற்றூழியர்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளார்கள் காலை 6:30 மணி தொடக்கம் 10 மணி வரை இவர்கள் இந்த பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள  நிலையில்  குறித்த நேரப் பகுதியில் மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளார்கள்.


இது குறித்து தொழிற்சங்கங்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில்


ஸ்ரீலங்கா ஜனராஜா சுகாதார சேவைகள் ஒன்றியம் சுகாதார துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவொன்றிற்கு மாத்திரம் பொருளாதார நீதியினை நிறைவேற்றும் அநீதியான தீர்மானத்திற்கு எதிராக 2024.04.02 ஆம் திகதி எடுக்கப்படும் தொழிற் சங்க நடவடிக்கைகள் தொடர்பாக அறிவுறுத்தல்


அமைச்சரவையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவொன்றிற்கு மாத்திரம் பொருளாதார நீதிக்காக வழங்கப்பட்ட ரூபா.35,000/- கொடுப்பனவினை சுகாதார துறையில் மற்றைய ஊழியர்களுக்கும் சமனாக வழங்குமாறு வலியுறுத்தி 2024.01.11 ஆம் திகதி 72 தொழிற் சங்கங்களின் அங்கத்தவர்கள் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், இதுவரையில் அதற்கு தீர்வு பெற்றுத்தர உரிய அதிகாரிகளுக்கு முடியாமல் போயுள்ளதனை மனவருத்தத்துடன் சுட்டிக் காட்டுகின்றோம்.


சுகாதார துறையில் ஈடுபட்ட சுகாதார ஊழியர்களை இந் நிலைமையின் மத்தியில் பாரிய விதத்தில் கருத்திற் கொள்ளாமையின் காரணத்தினால் ஏற்பட்டுள்ள அநீதிக்கு எதிராக 2024.04.02 ஆம் திகதி மு.ப.6.30 மணியிலிருந்து தொடர்ச்சியாக 72 தொழிற் சங்கங்களின் பங்களிப்புடன் அனைத்து ஊழியர்களும் மீண்டும் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதனை இங்கு தெரிவித்துக் கொள்வதோடு, தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வினை பெற்றுத் தருமாறு மிகவும் தேவைப்பாட்டுடன் தெரிவித்துள்ளார்கள்.



முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிற்றூழியர்களின் பணிபுறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி! Reviewed by Author on April 02, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.